Newskadai.com
தமிழ்நாடு

சேலத்தில் அதிகரித்து வரும் கொரோனா தொற்று… ஒரே நாளில் 7 பேர் பலியான துயரம்..!!

Share this:

கொரோனா பாதிப்பு ஒரு சில இடங்களில் குறைந்து கொண்டு வந்தாலும் மக்கள் தொற்றிலிருந்து முழுமையாக விடுதலையாகவில்லை என்பதே உண்மை. சேலம் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவரிகளின் சதவீதம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. அந்த வகையில் இதுவரை சேலம் மாவட்டத்தில் 16 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 286 பேர் ஆகும். இந்நிலையில் நேற்று 291 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என உறுதி செய்யப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டத்தில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 144 பேர்

  • எடப்பாடி ஒன்றிய பகுதிகளில் 14 பேர்
  • எடப்பாடி நகராட்சியில் 3 பேர்
  • காடையாம்பட்டியில் 8 பேர்
  • மகுடஞ்சாவடியில் 4 பேர்
  • மேச்சேரியில் 2 பேர்
  • மேட்டூர் நகராட்சியில் 2 பேர்
  • மேட்டூர் ஒன்றியத்தில் 3 பேர்
  • நங்கவள்ளியில் 10 பேர்
  • ஓமலூரில் 23 பேர்
  • சேலம் ஒன்றிய பகுதியில் 2 பேர்
  • தாரமங்கலத்தில் 8 பேர்
  • வீரபாண்டியில் 16 பேர்
  • சங்ககிரியில் 9 போர்
  • ஆத்தூர் நகராட்சியில் 2 பேர்
  • ஆன்தூர் ஒன்றியத்தில் 2 பேர்
  • அயோத்தியாப்பட்டணத்தில் 3 போர்
  • பேளூரில் 5 பேர்
  • பெத்தநாயங்ககன்பாளையத்தில் 7 பேர்
  • பனமரத்துப்பட்டியில் 1 பேர்
  • தலைவாசலில் 2 பேர்

வாழப்பாடி, கொளத்தூரில் தலா ஒருவர் உட்பட நேற்று ஒரே நாளில் 291 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. மேலும் உயிரிழந்தவரிகளின் எண்ணிக்கை 263 ஆக அதிகரித்துள்ளது.

brucella

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 16,495 பேர் இதில் சிகைச்சை பெற்று குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 13,905 பேர். மேலும் 2,327 பேர் கொரோனாவுக்கு தொடர்ந்து சிகிச்சைப் பெற்றுவருகிறார்கள். இந்த நிலையில் 50 வயதுக்கும் மேற்பட்டவர்கள் தொடர்ந்து சிகிகைச்சை பெற்று வந்த நிலையில் 4 பேர் நேற்று முன்தினம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனை தொடர்ந்து சேலத்தில் கொரோனா பாதிப்புக்கு நேற்று ஒரே நாளில் 7 பேர் பலியாகி உள்ளனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 263 ஆக உயர்ந்துவருகிறது.


Share this:

Related posts

ஏழுமலையான் கோவிலுக்கு ஹெலிகாப்டரில் சென்ற தொழிலதிபர்… திடீரென ஏற்பட்ட கோளாறால் நடந்த பகீர் சம்பவம்…!

THAVAMANI NATARAJAN

தமிழக மக்களே தயார்: நாளை முதல் வீடு தேடி வருகிறது அரசின் அசத்தல் டோக்கன்…!

THAVAMANI NATARAJAN

எங்கே மனிதாபிமானம்?… மீன் லாரி விபத்தில் படுகாயமடைந்தவர்களை பார்க்காமல் மீனை அள்ளிச்சென்ற மக்கள்…!!

THAVAMANI NATARAJAN

செப்.17ல் பொறியியல் தரவரிசை பட்டியல் வெளியீடு… அமைச்சர் கே.பி.அன்பழகன் அறிவிப்பு…!!

MANIMARAN M

கிலோ ரூ.45 மட்டுமே… சரசரவென உயர்ந்த வெங்காயம் விலையை சட்டென குறைத்த அரசு…!

THAVAMANI NATARAJAN

லட்சக்கணக்கில் பாதிப்பு… ஆயிரக்கணக்கில் பலி என… கொரோனா தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது…!!

POONKUZHALI