Newskadai.com
இந்தியா

“கொரோனா” பிடியில் 24 மாணவர்கள்… அரசை மதிக்காத ஆரம்ப பள்ளியால் நேர்ந்த சோகம்…!!!

School
Share this:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நாடு முழுவதும் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படாமல் இருக்கிறது. மத்திய அரசு பள்ளி கல்லூரிகளை திறப்பது குறித்து அந்தந்த மாநில அரசே முடிவு செய்துக் கொள்ளலாம் என அறிவித்திருந்தது. இருப்பினும் பெரும்பாலான மாநிலங்களில் பள்ளி கல்லூரிகள் திறக்கப்படவில்லை. இந்நிலையில் கர்நாடக மாநிலத்தில் பெலகாவி, கலபொரகி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த சில ஆரம்ப பள்ளிகள் அரசின் அனுமதியின்றி பள்ளியை நடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் 24 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் பெற்றோர்களும் அப்பகுதி மக்களும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து இப்பள்ளியினை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளை பெற்றோர்கள் முற்றுகையிட்டு மீண்டும் பள்ளியினை திறக்க கூடாது என போராட்டம் நடத்தினர். பெற்றோர்களின் கோரிக்கையை ஏற்ற அதிகாரிகள் பள்ளியினை மூட உத்தரவிட்டனர்.


Share this:

Related posts

தற்சார்பு இந்தியாவை உருவாக்க சபதமேற்போம்…பிரதமர் மோடியின் சுதந்திர தின சூளுரை

MANIMARAN M

சரயு நதிக்கரையில் விஸ்வரூபம் எடுக்கப் போகும் ராமர்… 3000 கோடியில் பிரம்மாண்டம்…!!

MANIMARAN M

“10 விட 19 தான் சின்னதோ?… திரும்ப நான் ஸ்கூலுக்கு போகனும் போலயே பாஜகவை பங்கம் செய்த ப.சிதம்பரம்…!

MANIMARAN M

சினிமா தாதாக்களை மிஞ்சும் ’தங்க கொரோனா மாஸ்க்’ தாதா…

NEWSKADAI

3ம் கட்ட ஊரடங்கு தளர்வுகள்… எதற்கெல்லாம் அனுமதி…. எவற்றுக்கெல்லாம் தடை தொடரும்…!!

NEWSKADAI

கேரள விமான விபத்து: மத்திய, மாநில அரசுகள் இழப்பீடு அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN