சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே ஜலகண்டாபுரத்தில் கொரோனா தொற்று தீயாய் வேகமெடுத்து வருகிறது. அப்பகுதியில் ஒரு மூதாட்டி, முதியவர், இளம் பெண் என 3 பேர் அடுத்தடுத்து மர்மமான முறையில் உயிரிழக்க அவர்களுக்கு கொரோனா தொற்று இருக்கலாம் என்ற தகவல்கள் வெளியான. இதையடுத்து 125 பேரிடம் சுகாதாரத்துறை பணியாளர்கள் நடத்திய ஆய்வில் 100 பேருக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த புதன்கிழமை ஜலகண்டாபுரத்தை சேர்ந்த 70 வயது முதியவர் தொடர் காய்ச்சல், சளி இருந்ததால் கொரோனா பரிசோதனையில் மேற்கொண்டுள்ளார். அந்த பரிசோதனையில் அவருக்கு தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் தொடர் காய்ச்சல், சளி குணமாகததால் சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், அவர் நேற்று திடீரென உயிரிழந்தார்.
வழக்கமாக முதல் பரிசோதனையில் தொற்று நெகட்டிவ் என வந்தவர்களுக்கு, இரண்டாவது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுவது வழக்கமான நடவடிக்கையாக உள்ளது. இந்நிலையில் தனக்கு கொரோனா தொற்று இருக்குமோ? என தொடர்ந்து முதியவர் பீதியில் இருந்து வந்தே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.
நாம் எடுக்கும் RTPCR பரிசோதனை மூக்கு நாசிக்குள், மேல் தொண்டைப்பகுதியில் அல்லது தொண்டைப்பகுதியில் எடுக்கப்படுகின்றது. அந்த இடத்தில் கொரோனா வைரஸ் இருக்கிறதா? என்பதை அறிவதே இந்த RTPCRஇன் நோக்கம். சில நாட்களை கழித்து RTPCR டெஸ்ட் எடுத்தால் பலருக்கும் நெகடிவ் என்று ரிசல்ட் வருவதற்கு காரணம். கொரோனா வைரஸ் தொண்டைப்பகுதியில் இருந்து பல்கிப்பெருகி கீழிறங்கி சுவாசப்பாதையின் கீழ்ப்பகுதிக்கு நகர்ந்திருக்கும். அங்கிருந்து நுரையீரலுக்கு சென்று தனது வேலையை தொடங்கும் நேரத்தில் இருமல் / மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை தென்படும். அப்போது தொண்டையில் வைரஸ் இருக்கிறதா? என்று பார்த்தால் பெரும்பாலும் நெகடிவ் என்றே ரிசல்ட் வரும்.
மேலும் விவரங்கள் : http://மக்களே உஷார்: இதுவும் கொரோனா அறிகுறிகள்தான்… மருத்துவர் விளக்கம்
கொரோனாவை தெளிவாக அறிந்துகொள்ள சிடி ஸ்கேன் நெஞ்சுப்பகுதிக்கு எடுக்கப்படுகின்றது. நெஞ்சுப்பகுதி சிடி ஸ்கேனில் நுரையீரலில் தனது வேலையை செவ்வனே செய்த கொரோனா வைரஸ் தொற்றின் வரைபடங்கள் தெரிய ஆரம்பிக்கின்றன. அதில் CORAD 3 முதல் 5 என்ற நிலை என்பது உள்ளே வந்திருப்பது கொரோனா தொற்று என்பதை கிட்டத்தட்ட உறுதி செய்கின்றது.
RTPCR பரிசோதனையில் நெகடிவ் என்று வந்தால் அதனால் அவர்களுக்கு கொரோனா தொற்று இல்லை என்பதும் அவசியமில்லை கொரோனா தொற்று தொண்டையில் இல்லை என்றால் நுரையீரலில் இருக்கிறது என்று அர்த்தம் என பரிசோதனை முறைப்பற்றி கூறுகிறார், சிவகங்கையைச் சார்ந்த பொது நல மருத்துவர Dr.ஃபரூக் அப்துல்லா.