Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

கொரோனாவுக்கு சிலை வைத்து வழிபடும் கோவை மக்கள்..!

Corona-Devi-idol
Share this:

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மக்களை பாதுகாக்க வேண்டுமென்ற நோக்கத்தில் கோவையில் ‘கொரோனா தேவி’ சிலை வைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் நாள்தோறும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16 லட்சத்து 99 ஆயிரத்து 225 ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்பு 18 ஆயிரத்து 734 ஆக உள்ளது. இதில் கோவை மாட்டத்தில் மட்டும் நேற்று ஒரே நாளில் 3 ஆயிரத்து 250 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதன் மூலம் கோவையில் கொரோனா பாதித்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1 லட்சத்து 25 ஆயிரத்து 151 ஆக அதிகரித்துள்ளது. எனினும், பாதிப்பில் இருந்து 97 ஆயிரத்து 40 பேர் குணமடைந்துள்ளனர். மருத்துவமனைகளில் 27 ஆயிரத்து 189 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில் வைரஸ் பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கோயம்புத்தூரில் ‘கொரோனா தேவி’ என்ற சிலை அமைக்கப்பட்டுள்ளது. 1.5 அடி உயரம் கொண்ட ’கொரோனா தேவி’யின் சிலை காமாட்சிபுரி ஆதினம் சார்பில் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா தேவி சிலைக்கு சிலைக்கு தினசரி பூஜைகளும் நடந்து வருகின்றன. இதுமட்டுமின்றி மக்களை பாதுகாக்க ‘கொரோனா தேவி’ சிலைக்கு 48 நாட்கள் சிறப்பு பூஜை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் சிறப்பு பூஜையில் பொதுமக்கள் பங்கேற்க அனுமதியில்லை.

கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசும், மருத்துவர்களும் போராடி வரும் நிலையில் தேவியின் சிலை வைத்து கொரோனாவை விரட்டு கோவை மக்களின் இந்த விநோதம் கேட்போரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.


Share this:

Related posts

ரெடியா..? இன்று முதல் ரூ.2,000 பெறலாம் – மேலும் 13 பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது

AFRIN

சீமானையும், ஹரி நாடாரையும் சும்மா விடாதீங்க… தற்கொலை முயற்சிக்கு முன் விஜயலட்சுமி வெளியிட்ட பரபரப்பு வீடியோ…!

NEWSKADAI

“அது எல்லாம் முடிந்து போன விவகாரம்”… ஆர்.பி.உதயக்குமாரை அசிங்கப்படுத்திய எடப்பாடியார்…!!

MANIMARAN M

“இந்த ஐடியா நமக்கு வராம போச்சே ” பெண்கள் நடத்திய தினுசான போராட்டம்

MANIMARAN M

அதிர்ச்சியில் அறிவாலயம்… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் பாஜகவில் இணைந்தார்??

AMARA

நாகை கடைக்காரர்களே உஷார்: வாடிக்கையாளர்கள் தவறு செஞ்சாலும் உங்களுக்குத் தான் அபராதம்… நகராட்சி அதிரடி உத்தரவு!!

MANIMARAN M