Newskadai.com
தமிழ்நாடு

‘கொரோனா’ கைதி தப்பியோட்டம்… சேலம் அரசு மருத்துவமனையில் பதற்றம்…!!

Share this:

சேலம் மாவட்டம் மல்லூர் அடுத்துள்ள ஆரங்கல்திட்டில் உள்ள அய்யண்ணன் என்பவரின் மனைவி லட்சுமி(60) கடந்த 17-ம் தேதி கல்லாங்குத்து கரட்டு பகுதியில் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்தார். இதனை கண்ட பொதுமக்கள் மல்லூர் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்ததின் பேரில் மல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ஓமலூர் கட்டிநாயக்கன்பட்டியை சேர்ந்த நரேஷ்குமார் (22) என்பவரை கைது செய்து விசாரித்து வந்தனர். இதுகுறித்த விசாரனையில் லட்சுமிடம் பணம் கேட்டதாகவும் தர மறுத்ததால் கீழே தள்ளி கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டு அவர் அணிந்திருந்த நகை பணம் செல்போன் ஆகியவற்றை எடுத்து கொண்டு ஓடியதாக போலீசார் தெரிவித்தனர்.

Covid

இதனை தொடர்ந்து நரேஷ்குமாரை சிறையில் அடைப்பதற்கு முன்பாக கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் அவருக்கு கொரோனா தொற்று அறிகுறி இருந்ததால் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நரேஷ்குமாரை விசாரித்த போலீசாரும் தனிமை படுத்தப்பட்டனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வேலையில் சிகிச்சை பெற்று வந்த நரேஷ்குமார் மருத்துவமனையிலிருந்து தப்பி ஒடிவிட்டார், அவரை போலீசார் கட்டிநாயக்கன்பட்டி மற்றும் பல்வேறு இடங்களில் தேடிவருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோடியது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கைதி தப்பியோடியது இரண்டாவது முறையாகும்.


Share this:

Related posts

5 ஜி காலத்தில் இப்படியொரு சிறுவன்… விவசாயத்தில் புகுந்து விளையாடும் 9 வயது பிரகதீஷ்…!!

MANIMARAN M

நெம்பர் பிளேட்டுக்கு அடுத்த ஆப்பு… போக்குவரத்து காவல்துறை அதிரடி..!!

THAVAMANI NATARAJAN

ஆளுநர் மாளிகையில் 3 பேருக்கு கொரோனா… தனிமைப்படுத்திக்கொண்டார் பன்வாரிலால் புரோகித்….!!

NEWSKADAI

“ஜி.எஸ்.டி. பாக்கி உடனே வேணும்”… மத்திய அரசுக்கு எதிராக கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டம்…!

MANIMARAN M

“எங்களுக்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா வேணும்”… அதிரடி கோரிக்கையுடன் போராட்டத்தில் குதித்த கோவை விவசாயிகள்…!!

MANIMARAN M

பாஜகவில் சேர வந்த ரவுடி… போலீசுக்கு பயந்து தப்பியோட்டம்…

MANIMARAN M