Newskadai.com
உலகம்

“ட்ரம்பின் அப்பனுக்கே அது தெரியாது”… அமெரிக்க அதிபரின் முகத்திரையை கிழித்த அண்ணன் மகள்…!

Share this:

அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் ஒரு மோசக்காரர், என்று ட்ரம்ப் பத்தி இப்படி கருத்துச் சொன்னது சீன அதிபரோ, வடகொரிய அதிபரோ, அல்லது ஈரான் அதிபரோ இல்லை, ட்ரம்ப்புடைய அண்ணன் மகள் மேரி ட்ரம்ப். கிளினிக்கல் சைகாலஜி படித்த மேரி ட்ரம்ப், தான் எழுதிய -Too much and never enough: How my family created the world’s dangerous man. புத்தகத்தில் தான் அமெரிக்கா அதிபர் ட்ரம்ப் பற்றி இப்படி எழுதி இருக்கிறார். ட்ரம்ப் தனக்கு பல்கலைக்கழகத்தில் இடம் கிடைக்க தனது நண்பரை தேர்வு எழுத வைத்து அதற்காக அவருக்கு நிறைய பணத்தையும் வழங்கி ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் நுழைந்தவர்.

Trump
  

ட்ரம்பிற்கு எதுவும் போதாது, அவர் சுயமோகியின் அத்தனை அம்சங்களையும் கொண்டவர், அவர் ஒரு NARCISSIST என்றும் குறிப்பிட்டுள்ளார். அனைவரையும் அச்சுறுத்தும் நபர் ஒவ்வொரு தருணத்திலும் அவரின் ஈகோ அவரை உயர்த்திப் பிடிக்கிறது, ட்ரம்பிற்கு இந்த குணம், அவரின் தந்தை ஃப்ரேட் ட்ரம்ப் சீனியரிடம் இருந்து வந்தது என்றும், மென்மையாக நடந்து கொள்வது என்பது ட்ரம்பின் அப்பாவிற்கு தெரியாத ஒன்று.

எனது தந்தை ஏதேனும் தவறு செய்து மன்னிப்பு கோரினால் அதை அவர் ஏற்கவே மாட்டார்” என்கிறார் மேரி ட்ரம்ப். ட்ரம்ப் தனது உணர்வை புரிந்துகொள்ள வாய்ப்பு கொடுக்காமல் இந்த உலகத்தின் மீதான ட்ரம்பின் பார்வையை மோசமாக்கியது மட்டுமல்லாமல், இந்த உலகில் ட்ரம்ப் வாழ்வதற்கான திறனை அவரின் தந்தை அழித்துவிட்டார் என்றும், ட்ரம்பின் இத்தகைய குணங்களுக்கு அவரின் தந்தை மீது குற்றம் சுமத்துகிறார் மேரி. ஃப்ரேட் ட்ரம்ப்.

தனது மூத்த மகன் குடும்ப வர்த்தகம் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தை எடுத்து நடத்த வேண்டும் என விரும்பியதாகவும், ஆனால் சூழ்நிலை காரணமாக தனது இரண்டாம் மகனான டொனால்ட் ட்ரம்பிடம் வர்த்தகத்தை ஒப்படைக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் மேரி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

சீனாவிற்கு அதிர்ச்சி கொடுத்த அமெரிக்கா… தூதரக கதவை உடைத்து திடீர் சோதனை…!

NEWSKADAI

டெம்பிள் சிட்டி குமாருக்கு நித்தியானந்தா கொடுத்த வாக்குறுதி… மாஸ் காட்டும் மதுரைவாசி…!!

AMARA

லெபனான் தலைநகரில் பயங்கர குண்டு வெடிப்பு… ரத்தத்தை உறைய வைக்கும் அதிர்ச்சி வீடியோ…!!

NEWSKADAI

டிக்டாக்கை ஒன்னும் பண்ணமுடியாது போல… கைமாற்றும் வேலை ஆரம்பம்…

MANIMARAN M

உலகை அச்சுறுத்த அடுத்த நோய் வந்தாச்சு… சீனாவை புரட்டி எடுக்கும் “புருசெல்லா”…!!

AMARA

60% வாக்குகளுடன் அமோக வெற்றி… இலங்கை தேர்தலில் ஜெயித்த ராஜபக்சே…!!

MANIMARAN M