Newskadai.com
லைஃப் ஸ்டைல்

ஏழைகளின் இதயத்தை துடிக்க வைத்த இதயம் அடங்கியது… மெர்சல் டாக்டர்

Share this:

எந்த வரையறைக்குள்ளும் அடங்காத, அடங்க மறுக்கின்ற நிகழ்வுகளை “விதிவிலக்கு” என்போம். மனிதர்களிலும் அப்படி விதிவிலக்கானவர்கள் இருக்கிறார்கள். அவர்களை எந்த வரையறைகளுக்குள்ளும் அடக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு விதிவிலக்கு மனிதர்தான் மருத்துவர் திருவேங்கடம். வட சென்னையின் எருக்கஞ்சேரி மற்றும் வியாசர்பாடி பகுதியில் லட்சக்கணக்கான ஏழை மக்கள் இவருக்கு வைத்துள்ள செல்லப் பெயர் ஐந்து ரூபாய் டாக்டர்.

ஏழை எளிய மக்களுக்கு பெரும்பாலும் இலவச மருத்துவம் பார்த்து வந்த டாக்டர் திருவெங்கடம் பணம் கொடுக்கும் அளவு வசதியுள்ள ஏழை நோயாளிகளிடம் பெற்ற கட்டணம் வெறும் ஐந்து ரூபாய் மட்டுமே. அதனால்தான் இவர் ஐந்து ரூபாய் டாக்டர் என்று மக்களால் அழைக்கப்பட்டார். பணி ஓய்வுக்குப் பின்னரும் கூட தனியார் மருத்துவமனைகளில் சேர்ந்து ஆயிரக்கணக்கில் கன்சல்டிங் ஃபீஸ் வாங்கும் டாக்டர்களுக்கு மத்தியில் இவர் ஒரு விதிவிலக்கு.

கடந்த 40 ஆண்டுகளாக வட சென்னை மக்களுக்கு சேவை புரிந்து வந்த மருத்துவர் திருவேங்கடம் அவர்கள் நேற்றைய தினம் இறைவனடி சேர்ந்தார். மெர்சல் படத்தில் ஏழை மக்களுக்கு ஐந்து ரூபாய்க்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவராக நடிகர் விஜய் நடிப்பதற்கு இவரே இன்ஸ்பிரேஷன்.

ஏழை எளிய மக்களுக்கு குறைந்த செலவில் தரமான மருத்துவ சேவை வழங்க கூடிய சிறந்த மருத்துவமனை ஒன்றை கட்ட வேண்டும் என்பது இவரின் நீண்ட நாள் ஆசை மட்டுமல்ல, கனவும் கூட. இந்த ஐந்து ரூபாய் டாக்டரின் ஆசையை கனவை துடிப்புள்ள இளைய சமுதாயம் நிறைவேற்றும் என்று எதிர்பார்ப்போம்.


Share this:

Related posts

ஏற்றம் தரும் ஏகாதசி விரதம்… எப்படி கடைபிடிக்க வேண்டும் தெரியுமா?

THAVAMANI NATARAJAN

“புது ஸ்கூல் பேக் வாங்க கூட காசில்ல”…. ஐ.ஏ.எஸ். வெறியுடன் சாதித்து காட்டிய மாணவன்…!!

NEWSKADAI

ஆன்லைனில் ஆடு விற்பனை… பிரியாணியை விட சூடாக நடக்கும் வியாபாரம்…!

NEWSKADAI

சங்கடங்களை தீர்க்கும் சங்கடஹர சதுர்த்தி….!!

THAVAMANI NATARAJAN

ஆடுவோமே…. பள்ளு பாடுவோமே…. ஆனந்த சுதந்திரம்… அடைந்துவிட்டோம்…

POONKUZHALI

சூப்பர் டாடிக்கு கைக் கொடுக்கும் ஆனந்த் மஹிந்திரா…

MANIMARAN M