Newskadai.com
அரசியல்

சில்லு சில்லாய் சிதைந்த நம்பிக்கை… சபாநாயகர் சிவக்கொழுந்தால் நிம்மதி இழந்த நாராயணசாமி…!

Share this:

புதுச்சேரியில் 5 காங்கிரஸ், ஒரு திமுக எம்.எல்.ஏ. உட்பட 6 பேர் அடுத்தடுத்து ராஜினாமா செய்ததால் நாராயணசாமி தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதையடுத்து இன்று காலை 10 மணிக்கு புதுச்சேரி சட்டப்பேரவை

Pondy

கூடியது. மக்களுக்காக செய்த திட்டங்களையும், கிரண்பேடியால் இளைக்கப்பட்ட துரோகத்தையும் முதலமைச்சர் நாராயணசாமி சுமார் 40 நிமிடங்கள் வரை எடுத்துரைத்தார்.

மத்திய அரசு வேண்டுமென்றே ஆட்சியை கவிழ்க்க முயற்சித்ததாகவும், ஆளுநர் கிரண்பேடி கோப்புகளில் கையெழுத்திடாமல் இழுத்தடித்தார் என்றும், மக்கள் நல திட்டங்களை நிறைவேற்ற முட்டுக்கட்டை போட்டார் என்றும் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தார். புதுச்சேரிக்கு சிறப்பு அந்தஸ்து கொடுக்கவில்லை, முறையாக நிதி ஒதுக்கவில்லை, கொரோனா காலக்கட்டத்தில் கூட மக்களுக்காக காங்கிரஸ் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் இரவு பகல் பாராமல் போராடினர் என அடுக்கடுக்காக அவையில் எடுத்துரைத்தார் நாராயணசாமி.

மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீது வாக்களிக்க நியமன எம்.எல்.ஏ.க்களுக்கு உரிமையில்லை என்றும் அவைத்தலைவரிடம் முறையிட்டார். ஆனால் அதனை சபாநாயகர் சிவக்கொழுந்து ஏற்றுக்கொள்ளாததால் முதல்வர் நாராயணசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் அவையை விட்டு வெளிநடப்பு செய்தனர். புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்ததாக சபாநாயகர் அறிவித்தார். இதனால் புதுச்சேரியில் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு கவிழ்ந்தது.


Share this:

Related posts

பிரணாப் முகர்ஜி உடலுக்கு இன்று இறுதி சடங்கு…. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுடன் நல்லடக்கம்…!

AMARA

சூடு பிடிக்கும் தமிழக தேர்தல் களம்..!!! அறிவாலயத்தில் இன்று திமுக உயர்நிலை குழு ஆலோசனை.!!!

MANIMARAN M

நீட் தேர்வு விவகாரம்: பேரவையில் முதல்வர் – ஸ்டாலின் இடையே காரசார விவாதம்…!

AMARA

அடுத்த வாரத்திலிருந்து அரசியல் சதுரங்கம் ஆரம்பம்… விடுதலை ஆகிறார் சசிகலா…!?

MANIMARAN M

“மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்குவோம்”… திமுக பொதுக்குழு கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!

NEWSKADAI

விவசாயத் திட்டத்தை அடுத்து பிரதமர் வீடு கட்டும் திட்டத்திலும் மோசடி…

MANIMARAN M