Newskadai.com
அரசியல்

குஷ்பு பாஜகவில் இணைய அவர் தான் காரணம்…. கடுப்பில் கொந்தளித்த காங்கிரஸ் மூத்த தலைவர்…!

Kushboo join bjp
Share this:

2021ம் ஆண்டு நடைபெற உள்ள தேர்தலுக்காக மிகப்பெரிய திட்டத்தை போட்டு வருகிறது பாஜக. அதன் முதற்படியாக தமிழக மக்களுக்கு நன்கு பரிட்சயமான பிரபலங்களை தங்களது கட்சியின் பக்கம் இழுத்துவருகிறது. அப்படி பாஜகவின் வலையில் விழுந்த கர்நாடக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலைக்கு தற்போது மாநில துணைத் தலைவர் பதவி கிடைத்துள்ளது. இதையடுத்து 7 வருடங்களாக காங்கிரஸ் கட்சியில் இருந்து வரும் நடிகை குஷ்புவை பாஜகவில் இணைய வைப்பதற்கான குதிரை பேரம் நடந்து வந்தது.

ஆனால் இந்த தகவலை குஷ்பு வெளிப்படையாக மறுத்து வந்தார். இந்நிலையில் நேற்று இரவு 9.30 மணிக்கு குஷ்பு அவசரமாக டெல்லி புறப்பட்டுச் சென்றது காங்கிரஸ் கட்சியினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இன்னும் சற்று நேரத்தில் டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் குஷ்பு அக்கட்சியில் இணைய உள்ளதாக தகவல்கள் பரவின. இதனால் கடுப்பான காங்கிரஸ் கட்சி தேசிய செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து குஷ்புவை நீக்கியுள்ளது. கட்சியிலிருந்து விலக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே குஷ்பு கட்சியிலிருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைவர் சோனியாகாந்திக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.

Kushboo join bjp

அந்த கடிதத்தில் பணத்திற்காகவே, புகழுக்காகவே நான் கட்சியில் இணையவில்லை என்றும், கட்சியின் நலனுக்காக உழைக்கும் தன்னைப் போன்றோர் ஒடுக்கப்படுவதாகவும், அதனால் நீண்ட ஆலோசனைக்குப் பிறகு கட்சியில் இருந்து விலக முடிவெடுத்ததாகவும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் செய்தி தொடர்பாளருமான கோபண்ணா, தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி ஒன்றில் குஷ்பு பாஜகவில் இணைய உள்ளதற்கான காரணங்களை புட்டு புட்டு வைத்துள்ளார்.

Kushboo join bjp

மேலும் படிக்க : http://“பூனைக்குட்டி வெளியே வந்தது”… ஒத்த ட்வீட்டில் உண்மையை உளறிய குஷ்பு… சற்று நேரத்தில் பாஜகவில் சங்கமம்??

குஷ்பு சமீபகாலமாகவே காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுகளில் தீவிரமாக இல்லை. படப்பிடிப்பில் பிசியாக இருந்து வந்தார். நாங்கள் அழைக்கும் போது கூட வெளிநாட்டில் ஷூட்டிங்கில் இருப்பதாக கூறினார். அவர் கணவர் சுந்தர் சி தான் குஷ்புவை பாஜகவில் இணைய வைக்கிறார். சொல்லப்போனால் அவருடைய அழுத்தம் காரணமாக தான் குஷ்பு பாஜகவில் இணையும் முடிவை எடுத்திருக்க வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

“சுப்ரீம் கோர்ட்ல பாத்துக்கலாம் ” நீட் தேர்வு விவகாரம்: மத்திய அரசுக்கு எதிராக ஒன்றிணைந்த 7 மாநில முதல்வர்கள்

MANIMARAN M

“இந்தி தெரிந்தால் தான் இந்தியரா..?” கன்னடர்கள், பஞ்சாபிகள், வங்காளிகள் போர்கொடி…

MANIMARAN M

எம்.பி. வசந்தகுமார் உடல் சந்தனபேழையில் நல்லடக்கம்… தாய், தந்தை நினைவிடம் அருகே புதைப்பு…!

AMARA

பாஜக தலைவர் எல்.முருகனுடன் திடீர் சந்திப்பு… முதல்வர் வீட்டில் நடந்தது என்ன?

THAVAMANI NATARAJAN

ஊழலுக்கு கதவு திறக்கும் இ-பாஸ் நடைமுறை தேவையில்லை”… முதலமைச்சருக்கு மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்…!!

THAVAMANI NATARAJAN

மோடி திட்ட மோசடிக்கு.. இந்த அறிவிப்புதான் காரணம்…!! முதல்வரின் அதிரடி குற்றச்சாட்டு…

MANIMARAN M