Newskadai.com
உலகம்

காங்கோ தங்க சுரங்கத்தில் திடீர் நிலச்சரிவு… குழந்தைகள் உட்பட50 பேர் பலி…!!

congo
Share this:

தங்கம், வைரம் என இயற்கை வளங்களுக்கு குறைவில்லாத ஆப்பிரிக்காவில் கனிம சுரங்களின் எண்ணிக்கையும் அதிகம். காங்கோ ஜனநாயகக் குடியரசின் கிழக்கு பகுதியில் உள்ள கமிட்டுகா என்ற இடத்தில் தங்க சுரங்கம் ஒன்று செயல்பட்டு வருகிறது. டெட்ராய்ட் என்ற அந்த சுரங்கத்தில் தொடர் மழை காரணமாக நேற்று மதியம் 3 மணி அளவில் திடீர் மண்சரிவு ஏற்பட்டது. இதையடுத்து அங்கு பணியில் இருந்த ஏராளமானோர் மண்ணுக்கு அடியில் சிக்கியினர்.

congo

மேலும் படிக்க: http://தாரமங்கலத்தில் பைக் ஓட்டி பழகும்போது பரிதாப விபத்து… பெற்றோரை இழந்து தவிக்கும் குழந்தைகள்…

இதையடுத்து மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்றன. இந்த விபத்தில் சிக்கி 50 பேர் உயிரிழந்துள்ளனர். அதில் பெரும்பாலானோர் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது. தற்போதைய தகவலின் படி ஒருவர் மட்டுமே படுகாயத்துடன் மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து நிலச்சரிவில் சிக்கி இருப்பவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது. சுரங்கத்தில் பணியாற்றிய தங்களது உறவினர்களின் நிலை குறித்து அறிவதற்காக ஏராளமானோர் அங்கு குவிந்துள்ளது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

congo


Share this:

Related posts

“ட்ரம்பின் அப்பனுக்கே அது தெரியாது”… அமெரிக்க அதிபரின் முகத்திரையை கிழித்த அண்ணன் மகள்…!

NEWSKADAI

டிரம்பை எச்சரித்த ஒபாமா… அனல் பறக்கும் அமெரிக்க அரசியல்…!!

MANIMARAN M

பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா..!! ஐநாவில் ஆவேச குற்றசாட்டு…

MANIMARAN M

செவ்வாய் கிரக ஆய்விற்கு புதிய ரோபோ… நாசா விஞ்ஞானிகளின் வரலாற்று சாதனை…!

NEWSKADAI

ஹேப்பி நியூஸ்: மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது கொரோனா தடுப்பூசி – வெளியானது அசத்தல் அறிவிப்பு

MANIMARAN M

பிரிட்டனில் கட்டாயமாகும் முகக்கவசம்.. எச்சரிக்கும் அரசு…

NEWSKADAI