Newskadai.com
தமிழ்நாடு

நாகை கடைக்காரர்களே உஷார்: வாடிக்கையாளர்கள் தவறு செஞ்சாலும் உங்களுக்குத் தான் அபராதம்… நகராட்சி அதிரடி உத்தரவு!!

Share this:

உலக பெருந்தொற்று கொரோனாவின் கோரப் பிடியில் சிக்கி உலக மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர். வேகமாக பரவி வரும் இந்த நோயினால் உலக நாடுகள் பெரும்பாலானவற்றில் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவிலும் கொரோனா பரவல் காரணமாக ஆகஸ்ட் மாத இறுதி வரை கட்டுபாடுகள் நிறைந்த பொது முடக்கத்தை மத்திய மாநில அரசுகள் அமல்படுத்தி வருகின்றன. 

இந்நிலையில் நாகப்பட்டினத்தில் கொரோனா தொற்று அதிக அளவில் பரவி வருவதையடுத்து நாகை நகராட்சி ஆணையர் கடும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளார். அதன்படி நோய்த் தொற்றை தடுக்கும் வகையில் பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் வரும் போதும், கடைகளுக்கு வரும்போதும் கட்டாயம் முகக்கவசம் அணிந்து வர வேண்டும். முகக்கவசம் அணியாமல் வருபவர்களுக்கு ரூ.200/- அபராதம் விதிக்கப்படும்.

மேலும், முகக்கவசம் அணியாமல் இருக்கும் வாடிக்கையாளர்களை எந்த கடைகளில் அனுமதித்தாலும் அதற்கு கடைகாரர்களையே பொறுப்பாக்கி சிறு வியாபாரக் கடைகளுக்கு ரூ.500 முதல் ரூ.2000 வரையும் பெரிய கடைகள் மற்றும் நிறுவனங்களுக்கு ரூ.4000 முதல் ரூ.5000/- வரையும் கண்டிப்பாக அபராதம் விதிக்கப்படும். தேவையின்றி வெளியில் வராமல் இருக்கவும், அதிக கூட்டம் கூடாமல் இருக்கவும் நாகை நகர மக்களை அறிவுறுத்தியுள்ளார்.


Share this:

Related posts

அடாவடி கடன் வசூல்: தனியார் வங்கியின் செயலால் தொழிலாளி பேங்க் வாசலிலேயே தீக்குளிப்பு…!!

MANIMARAN M

தடையை மீறி விநாயகர் சதுர்த்தி ஊர்வலம்… அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர் நீதிமன்றம் நம்பிக்கை…!!

MANIMARAN M

மணல் கடத்தல் வழக்கு… மாவட்ட ஆட்சியருக்கு கிடுக்குப்பிடி…!!

MANIMARAN M

ரெடியா..? இன்று முதல் ரூ.2,000 பெறலாம் – மேலும் 13 பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது

AFRIN

எகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…

NEWSKADAI

மாவட்டந்தோறும் அதிரடி… நாகை மக்களுக்காக முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்புகள்…!!

MANIMARAN M