Newskadai.com
தமிழ்நாடு

பிரதமர் மோடி ஆஹா…ஓஹோ.. என பாராட்டிய மதுரை சலூன்கடைக்காரர்… கந்துவட்டி புகாரில் தலைமறைவு…!!

Share this:

மதுரை மேலமடை பகுதியில் சலூன் கடை நடத்திவரும் மோகன், கொரோனா ஊரடங்கினால் வாழ்வாதரம் இழந்த தனது பகுதியில் வாழும் எளிய மக்களுக்கு உதவிட மகளின் கல்வி மற்றும் திருமணத்திற்காக வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் மூலம் உணவு பொருட்களை வழங்கினார். இதற்காக பிரதமரின் மான்கிபாத் நிகழ்ச்சியில் மோடியிடம் பாராட்டும் பெற்றார்.

மோடியின் பாராட்டினால் குடும்பத்துடன் பாஜகவில் இணைந்தார். இந்நிலையில் மோகன் மீது அதிக வட்டி கேட்டு மிரட்டியதாக புகார் அளிக்கபட்டுள்ளது. மதுரை அன்பு நகர் பகுதியை சேர்ந்த செங்கிராஜன் மருத்துவ செலவுக்காக சலூன் கடை மோகனிடம் 30,000 ரூபாய் வட்டிக்கு கடன் வாங்கியுள்ளார். பின்னர் செங்கிராஜன் வட்டியுடன் கடனையும் திருப்பிக் கொடுத்துள்ளார்.

ஆனால் இன்னும் கூடுதல் வட்டி வேண்டுமெனக் கேட்டு மிரட்டியுள்ளார் மோகன். இதனால் செங்கிராஜன் தன்னிடம் கூடுதல் வட்டி கேட்டு மிரட்டுவதாக மோகன் மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் அளிக்கப்பட்டதை அறிந்த சலூன் கடை மோகன் தலைமறைவாகி உள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Share this:

Related posts

மக்களே இது போன்ற தரமற்ற ஆய்வகத்தில் கொரோனா பரிசோதனை செய்யாதீர்..!!

THAVAMANI NATARAJAN

ஆசிரியர் தகுதி தேர்வில் திடீர் திருப்பம் .. அன்புமணிக்கு அமைச்சர் செங்கோட்டையன் அதிரடி பதில்..!!

THAVAMANI NATARAJAN

அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 10 மாவட்டங்களின் நிலை என்ன தெரியுமா?…. அதிரடி எச்சரிக்கை…!

NEWSKADAI

சாலையில் அறுந்து கிடந்த மின் ஒயர்… உடல் கருகி துடிதுடித்து உயிரிழந்த இளைஞர்…!

THAVAMANI NATARAJAN

“உள்ளங்களில் நல்லிணக்கம் நிலவ வாழ்த்துக்கள்”… முதல்வர், துணை முதல்வர் பக்ரீத் திருநாள் வாழ்த்து…!!

THAVAMANI NATARAJAN

சேலத்தை கதறவிடும் ‘கொரோனா’… 136 இடங்களில் இன்று மருத்துவ முகாம்…!!

THAVAMANI NATARAJAN