Newskadai.com
தமிழ்நாடு

வேளாண் மசோதாவை எதிர்த்து கிருஷ்ணகிரியில் விவசாயிகள் போராட்டம்…!

Share this:

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்து நாடெங்கிலும் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். தமிழகத்தில் பல மாவட்டங்களில் விவசாயிகள் காய்கறி மாலை அணிந்துக் கொண்டும், மண் சட்டிகளை தூக்கிக் கொண்டும், உடலில் பட்டை மற்றும் நாமம் போட்டுக் கொண்டும், புதிய வேளாண் சட்ட நகல்களை கிழித்தும், எரித்தும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் வேளாண் மசோதாக்களை திரும்பப் பெறக் கோரி மத்திய அரசையும், மசோதாவை ஆதரித்த அ.தி.மு.க. அரசைக் கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சிகள், விவசாய சங்கங்கள் சார்பில் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 இடங்களில் நேற்று மறியல் போராட்டம் நடைபெற்றது. கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் அருகில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சேகர் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது.

இதில் மாநிலக்குழு உறுப்பினர் சிவராஜ், மாவட்ட பொருளாளர் வெங்கடாசலம், விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மற்றும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் விவசாய விரோத மசோதாக்களை திரும்பப்பெறக் கோரி முழக்கங்களை எழுப்பி சாலை மறியலில் ஈடுபட்டனர். அங்கு மறியலில் ஈடுபட்டதாக 34 பேரை போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் தேன்கனிக்கோட்டை தபால் அலுவலம் முன்பும், சூளகிரி ரவுண்டானா அருகிலும், ஓசூர் ஆர்.சி.தேவாலயம் அருகிலும் மற்றும் ஊத்தங்கரை, அஞ்செட்டி பகுதிகளிலும் வேளாண் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து மறியல் போராட்டம் நடந்தது. இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துக் கொண்டனர். ஊத்தங்கரையில் மறியலில் ஈடுபட்ட முன்னாள் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் உள்பட 715 பேர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


Share this:

Related posts

சினிமா பாணியில் வழக்கறிஞர்கள் ஒரே நேரத்தில் வெட்டிக் கொலை… சொத்துக்காக நடந்த பயங்கரம்..!!

THAVAMANI NATARAJAN

அறந்தாங்கியில் ஈட்டியால் குத்தி பெயிண்டர் கொடூரக் கொலை…!!!

MANIMARAN M

உலகப் புகழ்பெற்ற வேளாங்கண்ணி மாதா கோயில் திருவிழா… பக்தர்களுக்கு சிறப்பு ஏற்பாடுகள்…

MANIMARAN M

மேட்டூர் அணையின் “செஞ்சுரி தடுப்பு”… சட்டென குறைக்கப்பட்ட நீர்வரத்து…!!

THAVAMANI NATARAJAN

தமிழக ராணுவ வீரர் திருமூர்த்தி உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்…!!

AMARA

வரலாற்றில் முதன் முறையாக தேசிய கொடியேற்றிய தூய்மைப் பணியாளர்கள்…

MANIMARAN M