Newskadai.com
தமிழ்நாடு

கேரள தங்க கடத்தல் வழக்கில் திடீர் திருப்பம்… கோவை நகைப்பட்டறை உரிமையாளரை வளைத்த என்.ஐ.ஏ. அதிகாரிகள்…!!

Share this:

நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய கேரளா தங்க கடத்தல் வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ) விசாரித்து வருகிறது. “அமீரகத்திலிருந்து கேரளாவில் இருக்கும் ஐக்கிய அரபு அமீரகத் தூதரகத்திற்கு பார்சல்களை அனுப்பி தங்கம் கடத்தியதாக முன்னாள் துணைத் தூதரக செயலர் ஸ்வப்னா சுரேஷ், அவரது நண்பர் சந்தீப் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டு விசாரனை நடைபெற்று வருகிறது. இந்த கடத்தல் இந்திய பொருளாதாரத்தை சீர்குலைக்க சதி நடந்துள்ளதாக என்ஐஏ குற்றஞ்சாட்டியது.

இந்த வழக்கில் விசாரணைத் தொடர்ந்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ளவர்களுக்கும் இதில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. அதைத் தொடர்ந்து டிஎஸ்பி சாகுல்அமீது தலைமையில் 4 பேர் கொண்ட என்.ஐ.ஏ அதிகாரிகள் கோவை பவளம் வீதியில் உள்ள நந்தகுமார் (42)  என்பவரது வீட்டில் இன்று காலை 6 மணி முதல் சோதனை செய்து வருகின்றனர். நந்தகுமார் மாடியில் உள்ள வீட்டில் குடியிருந்தும் தரைத்தளத்தில் நகை செய்யும் பட்டறை நடத்தியும் வருகிறார்.


Share this:

Related posts

செப்.7 முதல் தமிழ்நாட்டில் எந்தெந்த ஊருக்கு ரயில் ஓடும் – தென்னக ரயில்வே அறிவிப்பு…

MANIMARAN M

கொரோனாவை வைத்து கொள்ளை லாபத்திற்கு பிளான்போடும் தனியார் மருத்துவம்… தமிழக அரசு தடாலடி எச்சரிக்கை

MANIMARAN M

கோவையில் வாடகை ஹெலிகாப்டர் சேவை… அரை மணி நேரத்திற்கு இவ்வளவு காசா?

THAVAMANI NATARAJAN

வாழ்த்துக்கள் டீச்சர்: நல்லாசிரியர் விருதினை பெரும் திருப்பூர் மாவட்ட பெண் ஆசிரியர்கள்

MANIMARAN M

தொடருமா அதிமுக – பாஜக கூட்டணி ?… கமலாலயத்தில் இன்று நடக்கிறது செயற்குழு கூட்டம்…!!

MANIMARAN M

நீதிபதிக்கே இந்த நிலைமையா..?? கொதித்தெழுந்த மனித உரிமை ஆணையம் காவல் துறைக்கு நோட்டீஸ்…

MANIMARAN M