Newskadai.com
தமிழ்நாடு

ஆன்லைன் கல்விக்கு வழியில்லையா!? வீடு தேடி போய் அசத்தும் கோவை ஆசிரியர்…!!

Share this:

கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ள நிலையில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கு ஆன்லைன் வழியாக வகுப்புகள் நடத்தி வருகிறது, ஆண்ட்ராய்டு போன் வாங்க இயலாத மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் கல்வி கற்க முடியாத நிலை ஏற்படுகிறது, இந்நிலையை அறிந்து அனைத்து மாணவர்களுக்கும் கல்வி சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சில ஆசிரியர்கள் மாணவர்களின் வீடுகளுக்கே சென்று அப்பகுதி மாணவர்களை ஒருங்கிணைத்து பாடம் நடத்தி வருகின்றனர்.

Teacher

கோவை வடவள்ளி அருகே உள்ள சோமயம்பாளையத்தில் அரசு பள்ளி ஆசிரியர் கருப்பசாமி ஆண்ட்ராய்ட் மொபைல் இல்லாத அரசு பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் பகுதிகளுக்கே சென்று கோவில் அல்லது மரத்தடியில் பாடம் நடத்தி அசத்தி வருகிறார். மாணவர்களுக்கு எளிமையாக புரியும் வகையில் பாடம் நடத்திவருகிறார், அதுசமயம் மாணவர்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் முகக்கவசம் கட்டாயம் அணியவைத்தும்,

சமூக இடைவெளியில் அமர வைத்தும் பாடம் நடத்தி வருகிறார் ஆசிரியர் கருப்புசாமி, இவரின் சேவை மனபான்மையையும் தற்கால நெருக்கடியான சூழலை அறிவுபூர்வமாய் மாணவர்களுக்கு எப்படியும் கல்வியை கொண்டு சேர்த்துவிட வேண்டும் என்று முயற்சித்துவரும் இவரின் புதுமையான கொரோனா கால கல்வி முறையை இப்பகுதியை சேர்ந்த மக்கள் பாராட்டி விருகிறார்கள்.


Share this:

Related posts

அடித்து சொல்லும் அண்ணா யூனிவர்சிட்டி… அரசின் ஊசல் ஆட்டத்தால் தவிக்கும் மாணவர்கள்…!!

THAVAMANI NATARAJAN

ஜலகண்டாபுரம் டோட்டல் குளோஸ்: ஒரு வாரத்திற்கு இது மட்டும்தான் கிடைக்கும்!!…

THAVAMANI NATARAJAN

சேலத்தில் ஏடிஎம்-ல் கொள்ளையர்கள் கைவரிசை… போலீஸ் வலைவீச்சு..!!

THAVAMANI NATARAJAN

தனி மாவட்டமாக உருவாகிறதா கும்பகோணம்?… வெற்றி இலக்கை எட்டப்போகும் நீண்ட போராட்டம்…!!

THAVAMANI NATARAJAN

கோவிலுக்குள் கொன்று புதைப்பட்ட இளைஞர் சடலம்… கள்ளக் காதலால் அர்ச்சகர் செய்த கொடூரம்…!!

MANIMARAN M

நாளையுடன் நிறைவடைகிறது பிளஸ் 1, பிளஸ் 2 மறுகூட்டல் விண்ணப்பம்…!!

THAVAMANI NATARAJAN