Newskadai.com
தமிழ்நாடு

எங்கள காப்பாத்துங்க: கோவையில் ஒற்றைக்காலில் நின்று விவசாயிகள் ஆர்ப்பாட்டம்…!!

Covai
Share this:

கோவை மாவட்டம் ஆனைமலை தாலுகா அங்கலகுறிச்சி, ஆழியாறு, கம்மாளப்பட்டி, செம்மனாம்பதி, காளியாபுரம், கோட்டூர், அம்பராம்பாளையம், மஞ்சநாயக்கனூர், கிழவன்புதூர், சேத்துமடை, மாரப்ப கவுண்டன்புதூர் ஆகிய பகுதிகளில் தென்னை விவசாயம் மற்றும் மரவள்ளிக்கிழங்கு, தக்காளி, காய்கறிகள் விவசாயம் செய்து வருகின்றனர். தற்போது தென்னை விவசாயத்தில் தேங்காய் ஆரம்ப நிலையான குரும்பைகளை மரப்பூனைகளும், மரநாய்களும் சேதப்படுத்தி பாதிப்பை ஏற்படுத்துகின்றன. காட்டு பன்றிகள் விவசாய பயிர்களை நாசப்படுத்தியும், விவசாயிகளையும் தாக்கியும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது.

Covai

இதனால் விவசாயம் கடுமையான பாதிப்புக்குள்ளாகிறது. வனவிலங்குகளால் பாதிப்புக்குள்ளாகும் விவசாயம் மற்றும் விவசாயிகளை பாதுகாக்க வனத்துறையும், மாவட்ட நிர்வாகமும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி விவசாயிகள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஒற்றைக்காலில் நின்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சு.பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பட்டத்தில் விவசாயிகள் கலந்துக் கொண்டனர், பின்னர் இந்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர். 


Share this:

Related posts

ஹிந்தி மட்டுதான் அரசின் அலுவல் மொழியா?? காவிரி உரிமை மீட்புக் குழு கண்டனம்…

MANIMARAN M

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் தரவரிசைப் பட்டியல் இன்று வெளியீடு…!!

MANIMARAN M

இ-பாஸ் பெறுவதை எளிமையாக்க குழுக்கள் அமைப்பு… முதலமைச்சர் பழனிசாமி அதிரடி உத்தரவு…!!

POONKUZHALI

இளைஞர் மீது ஏறிய கார் : மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்

MANIMARAN M

அடுத்த 5 நாட்களுக்கு இந்த கடல் பகுதிகளுக்கு செல்ல வேண்டாம்… மீனவர்களுக்கு வானிலை மையம் எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN

ஆகஸ்ட் 17 முதல் அனைவருக்கும் இ-பாஸ்… அதிரடி அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர்…!!

AMARA