Newskadai.com
தமிழ்நாடு

கோவை விவசாயியின் சாதனை: 2 ஏக்கரில் 250 வகை காய்கறிகள் பயிட்டு அசத்தல்…!

Share this:

கோவை மாவட்டத்தில் தனது இரண்டு ஏக்கர் நிலத்தில் 250 வகையான காய்கறிகளை பயிரிட்டு ஆய்வு செய்து வரும் விவசாயி அனைவரது கவனத்தை பெற்றுள்ளார். மேட்டுப்பாளையத்தை அடுத்த சிறுமுகை அருகேயுள்ளது சம்பரவள்ளி, இங்கு விஸ்வநாதன் என்ற விவசாயி தனது 10 ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வருகிறார். அதில் 2 ஏக்கர் நிலத்தை தனியே ஒதுக்கி சிறு, சிறு பாத்திகள் அமைத்து, பல மாநிலங்களில் விளைவிக்கப்படும் காய்கறிகளை அங்கு பயிரிட்டு ஆய்வு செய்து வருகிறார்.

சொட்டு நீர் பாசன மூலம் தண்ணீர் பாய்ச்சப்படுவதால் அதிக செடிகளை பயிரிட இட வசதி செய்து கிடைக்கிறது. இவரது முயற்சிக்கும் நல்ல பலன் கொடுக்கும் விதமாக ஒவ்வொரு செடிகளிலும் ஏராளமான காய்கள் விளைகிறது. வட மாநிலங்களில் ஒவ்வொரு காய்கறி வகையையும் பல ரகங்களாக பிரித்து பயிரிடுவதால், அதிக மகசூல் ஈட்டி வருகின்றனர். அதை பின்பற்றியே தனது நிலத்திலும் இப்படி ஒரு ஏற்பட்டை செய்ததாக கூறுகிறார் விவசாயி விஸ்வநாதன்.

அதன்படி விஸ்வநாதன் தோட்டத்தில் ஒரே வகை காயின் பல ரகங்கள் பயிரிடப்பட்டுள்ளன. அதாவது 15 வகை வெண்டைக்காய்கள், 51 வகை பாகற்காய், 30 வகை சுரைக்காய், 60 வகை தக்காளி, 50 வகை மிளகாய் என 250 வகையான காய்கறிகளை பயிரிட்டுள்ளார். இதன் மூலம் உற்பத்தி செலவு குறைவதாகவும், 45 நாட்களிலேயே தொடர்ந்து 2 மாதம் வரை அறுவடை செய்யலாம் என்று தெரிவிக்கிறார் விவசாயி விஸ்வநாதன்.


Share this:

Related posts

6 வருடங்களாக அலைக்கழிப்பு… மேட்டூர் தாசில்தார் காலில் விழுந்து கதறிய அபலை பெண்…!

THAVAMANI NATARAJAN

9 ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்… சாத்தான்குளம் ஐ.பி.எஸ். அதிகாரி சென்னைக்கு மாற்றம்…!!

AMARA

ஜெயலலிதாவை மிஞ்சிய எடப்பாடியார்… விநாயக சதூர்த்தி ஊர்வலங்களுக்கு தடை…

MANIMARAN M

குறுவை சாகுபடிக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு…!!

THAVAMANI NATARAJAN

ஆன்லைன் வகுப்புகளுக்கு தடையில்லை… 14 வழிகாட்டுதல்களை பிறப்பித்தது சென்னை உயர் நீதிமன்றம்…!!

AMARA

“குடும்பத்தை விட கடமையே முக்கியம்”… கொரோனாவால் உயிரிழந்த காவலர்களுக்கு ஜலகையில் வீரவணக்கம்…!

THAVAMANI NATARAJAN