Newskadai.com
தமிழ்நாடு

மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுக்கு அபராதம் : சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி…

Ravindranath case
Share this:

கோவை மாவட்டம் பேரூர் கீழேரி பட்டீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான நிலங்களை விவசாயிகள் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்து வருகின்றனர். கோவில் நிலங்களின் ஒரு பகுதியில் விவசாயத்திற்கும், மற்றொரு பகுதியில் நீர் வரும் கால்வாயகவும் இரண்டுக்குமிடையில் மண் சாலையுமாக பயன்பாட்டில் உள்ளது. இங்கு செய்யப்படும் விவசாயத்திற்கு நொய்யல் ஆறு மிக முக்கிய நீராதாரமாக இருந்து வரும் நிலையில், இப்பகுதிக்கு வரும் கால்வாய் சரியாக பரமாரிக்கப்படாததால் குப்பைகள் கொட்டப்பட்டும் ஆக்கிரமிப்புகளும் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் கால்வாய் மீது புதிய சாலை அமைப்பதற்கு கோவை மாவட்ட ஆட்சியர் அனுமதி வழங்கியிருந்தார். இதனையறிந்த பேரூர் பட்டீஸ்வரர் திருக்கோவில் குத்தகை விவசாயிகள் சங்கம் மற்றும் பேரூர் கீழேரி நீர் பாசன விவசாயிகள் சங்கம் இணைந்து கால்வாய் மீது சாலை அமைக்க மாவட்ட ஆட்சியர் வழங்கிய அனுமதியை ரத்து செய்ய கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணையில் அரசு பதில் அளிக்க நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மீண்டும் விசாரணைக்கு வந்த இந்த வழக்கில் அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்ய மேலும் கால அவகாசம் கோரப்பட்டது.

இதை கேட்ட நீதிபதி அனிதா சுமந்த், தொடர்ந்து கால அவகாசம் கேட்பதால், தமிழக அரசின் வருவாய் துறை செயலாளர், பொதுப்பணித்துறை செயலாளர், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் பேரூர் பஞ்சாயத்தின் செயல் அதிகாரி ஆகியோருக்கு 2000 ரூபாய் அபராதம் விதிப்பதாகவும், அந்த தொகையை அடையார் புற்றுநோய் மருத்துவமனைக்கு அளிக்க வேண்டும் என உத்தரவிட்டார். மேலும் இந்த வழக்கு தொடர்பாக வரும் அக்டோபர் 9ம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டார்.


Share this:

Related posts

தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு??…. விரைவில் முதல்வர் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு…!!

AMARA

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி… அதிரடியாக உயரும் செல்போன் கட்டணங்கள்…!!

THAVAMANI NATARAJAN

“கிளாஸ் சோடோ பாகர் ஜாவ்” : தமிழக அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹிந்தி…

MANIMARAN M

மதுரை டூ நாகர்கோவில்… மூன்றரை மணி நேரத்தில் உயிர் காக்க பறந்த ஆம்புலன்ஸ்… பரபரப்பு நிமிடங்கள்…!

THAVAMANI NATARAJAN

கொரோனா : மாவட்ட அளவில் கூடியும், குறைந்தும் காணப்படும் தொற்று பாதிப்பு…!!

NEWSKADAI

கொரோனா பெண் நோயாளி தற்கொலையா?… சென்னை முகாமில் பரபரப்பு…!!

THAVAMANI NATARAJAN