Newskadai.com
தமிழ்நாடு

இ-பாஸ் ரத்து, பொது போக்குவரத்து தொடக்கம்… தமிழக மக்களுக்கு நல்ல செய்தி சொல்வாரா முதலமைச்சர்??

Share this:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல கட்ட ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் ஒரு மாநிலத்திற்கு உள்ளேயும், மாநிலங்களுக்கிடையேயும் செல்வதற்கு இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு உத்தவிட்டு கடைபிடித்து வருகின்றது. வரும்ஆகஸ்ட் 31-ஆம் தேதி முடிவடைய இருக்கும் ஊரடங்கிற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது.

இந்நிலையில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வது குறித்து நேற்று தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தினார். அதில் சில மாவட்டங்களில் இ பாஸ் நடைமுறையை எளிதாக்கியதால் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது என்று ஆட்சியர்கள் தெரிவித்ததாகவும், அந்த மாவட்டங்களில் பரிசோதனைகளை அதிகரிக்கவும் ஆலோசனை கூறப்பட்டதாகவும் தெரிகிறது.

மத்திய உள்துறை அமைச்சகம் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்ய மாநில அரசுகளை அறிவுறுத்திய நிலையில், வரும் ஆகஸ்ட் 29ஆம் தேதி தமிழக முதல்வர் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தவுள்ளார். அதில், ஆகஸ்ட் 31 ஆம் தேதி முடிவடைய இருக்கும் ஊரடங்கிற்கு பிறகு எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும், பொது போக்குவரத்திற்கு அனுமதியளிப்பது குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது. இந்த ஆலோசனைக்கு பிறகு தமிழக முதல்வர் இ-பாஸ் ரத்து மற்றும் பொது போக்குவரத்து அனுமதி குறித்த அறிவிப்பை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Share this:

Related posts

“நீட் தேர்வை கட்டாயம் எழுதி தான் ஆகனும்”… சேலத்தில் கொந்தளித்த பிரபல நடிகை…!!

THAVAMANI NATARAJAN

சேலத்தை அடித்து நொறுக்கிய பேய் மழை… வீடுகளை சூழ்ந்த வெள்ள நீரால் மக்கள் அவதி…!!

THAVAMANI NATARAJAN

கோவையில் கொரோனா பீதி… நகைக்கடை உரிமையாளர்கள் எடுத்த அதிரடி முடிவு…!!

MANIMARAN M

பள்ளி மாணவர்களுக்கு நல்ல செய்தி… விலையில்லா புத்தகங்கள் கொடுக்கும் பணி தொடங்கியாச்சு…!!

THAVAMANI NATARAJAN

சூடுபிடிக்கும் தமிழகத் தேர்தல் களம்… கட்சி தாவும் பிரபலங்கள்…

MANIMARAN M

4 மணி நேரத்திற்கும் மேலாக திணற திணற விசாரணை… எஸ்.வி.சேகரை வச்சி செய்யும் காவல்துறை…!!

NEWSKADAI