Newskadai.com
தமிழ்நாடு

தமிழகத்தில் இ-பாஸ் முறை ரத்தா..? அரசின் முடிவு என்ன..?

Share this:

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல கட்ட ஊரடங்கை அமல்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் ஒரு மாவட்டத்திலிருந்து மற்றொரு மாவட்டத்திற்கு செல்வதற்கு இ-பாஸ் பெற வேண்டும் என்று தமிழக அரசு உத்தவிட்டு கடைபிடித்து வருகின்றது. வரும்ஆகஸ்ட் 31-ஆம் தேதி முடிவடைய இருக்கும் ஊரடங்கிற்கு பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அரசு ஆலோசனை செய்து வருகிறது. இந்நிலையில் இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வது குறித்து இன்று தலைமைச் செயலாளர் அனைத்து மாவட்ட ஆட்சியாளர்களுடன் காணொலி மூலம் ஆலோசனை நடத்தி வருகிறார்.

இ-பாஸ் முறை ரத்து செய்தால் அதன் பிறகு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கபடுவதாக தகவல் கிடைத்துள்ளது. இதனிடையே சென்னையில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளரின் இ-பாஸ் ரத்து குறித்த கேள்விக்கு பதிலளிக்கையில், மத்திய அரசின் அறிவுறுத்தலின்படி இ-பாஸ் நடைமுறையை ரத்து செய்வது குறித்து முதல்வர் கள ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். விரைவில் அது குறித்து முதல்வர் அறிவிப்பார் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

நாளை முதல் ரேசன் கடைகளில் இதுவும் இலவசம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!

NEWSKADAI

தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள்…!! மன் கி பாத்தில் தமிழக பெருமை பேசிய பிரதமர் மோடி..

MANIMARAN M

சென்னையில் மீண்டும் விஸ்வரூபம் எடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 1182 பேருக்கு தொற்று உறுதி…!!

NEWSKADAI

நீட் தேர்வால் தருமபுரி மாணவன் தற்கொலை… உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்…!!

AMARA

சினிமா பாணியில் சிலை கடத்தல்… இணைய பேரத்தில் சிக்கிய கொள்ளை கும்பல்…

MANIMARAN M

குறுவை சாகுபடிக்காக அமராவதி அணையிலிருந்து தண்ணீர் திறப்பு…!!

THAVAMANI NATARAJAN