Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

ரெடியா..? இன்று முதல் ரூ.2,000 பெறலாம் – மேலும் 13 பொருட்கள் இலவசமாக கிடைக்கிறது

stalin03
Share this:

கொரோனா ஊரடங்கு நிவாரண நிதியின் இரண்டாவது தவணை தொகையான ரூ.2,000 டோக்கன் இன்று முதல் வழங்கப்படுகிறது. சென்னையில் கொரோனா நிவாரண நிதி மற்றும் 13 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

http://அதிரடி விலை குறைவு டாப் பிராண்ட் சர்ட், பேண்ட் வாங்கலாம்

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் 30 ஆயிரத்தை தாண்டி பதிவாகி வருவதால் 2 வாரங்களுக்கு தளர்வுகளின்றி முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்துள்ளது. இதனால் கடந்த சில நாட்களாக ஒரு நாள் பாதிப்பு 30 ஆயிரத்திற்கும் கீழே பதிவாகி வருகிறது. கொரொனா ஊரடங்கு காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.4,000 வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். முதல் தவணையாக தலா ரூ. 2000 கடந்த மாதம் இறுதியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து 2வது தவணை தொகையான தலா ரூ.2,000 வழங்கும் பணி இன்று தொடங்கியது.

Corona-Relief-Fund

இதுமட்டுமின்றி, மக்களின் சிரமங்களை குறைக்கும் விதமாக அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் 13 வகையான மளிகைப்பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பும் வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாயவிலைக்கடைகளில் கோதுமை, ரவை, சர்க்கரை, உப்பு, புளி, மஞ்சள் தூள், கடுகு, பருப்பு, சீரகம், குளியல் சோப், சலவை சோப் உள்ளிட்ட 13 பொருட்கள் வழங்கப்படும் வழக்கப்படுகிறது.

இந்த நிவாரணப் பொருட்களை பெற பொதுமக்களுக்கு ரேசன் கடைகள் மூலம் டோக்கன் வழங்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக தலைமைச் செயலகத்தில் கூட்டுறவுத் துறை மற்றும் உணவுத்துறை அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசனை நடத்தினார். அப்போது, 13 வகையான பொருட்கள் அடங்கிய நிவாரணத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தலைமைச் செயலகத்தில் வைத்து தொடங்கி வைக்க முடிவு எடுக்கப்பட்டது.

http://’மாஸ்டர்’ படத்தில் விஜய் அணிந்த சட்டையின் விலை இவ்வளவு தானா?

நிவாரண பொருட்களின் தொகுப்பு வழங்குவது மட்டுமின்றி, 2ஆம் தவணை கொரோனா நிவாரண நிதியான தலா ரூ.2,000 வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் இன்று தொடங்கி வைத்தார்.


Share this:

Related posts

இந்திய ரேஷன் கடைகளில் முதன்முறையாக… தமிழகத்தில் வருகிறது… மொபைல் ரேஷன் ஷாப்…

MANIMARAN M

இன்று முதல் ஜியோவின் அதிரடி ஆரம்பம்… 30 நாட்களுக்கு இலவசம்… வெறும் 399-ல் குறைவில்லாத டேட்டா…!!

AMARA

மரணத்தில் முடிந்த “பர்த்டே” பார்ட்டி… மரத்தில் கார் மோதிய விபத்தில் 4 பேர் பலி…!!

MANIMARAN M

சிக்கலில் வாட்சப் – தகவல்கள் சேகரிக்கப்படுமா..? அச்சத்தில் பயனாளர்கள்..!

MANIMARAN M

கல்வி கொள்கையின் மாற்றத்தை அனைவரும் ஏற்க வேண்டும்… புதிய கல்விக்கொள்கை மாநாட்டில் பிரதமர் மோடி உரை…!!

THAVAMANI NATARAJAN

இளைஞர் மீது ஏறிய கார் : மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்

MANIMARAN M