Newskadai.com
அரசியல் தமிழ்நாடு

மகிழ்ச்சி செய்தி..! ஒவ்வொரு குழந்தைக்கும் ரூ.5 லட்சம் வழங்கப்படும்

Share this:

கொரோனா பாதிப்பால் பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு வேகமாக பரவி வருவதால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் உயர்ந்து வருகின்றன. ஏற்படும் பேரழிவினை தவிர்க்கும் விதமாக தமிழகம் முழுவதிலும் இரண்டு வாரங்களுக்கு எந்தவித தடைகளும் இன்றி கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த சூழலில் கொரோனா தொற்றின் காரணமாக பெற்றோரை இழந்து ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளை பாதுகாக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார். அந்த ஆலோசனைக்கு பிறகு கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் வைப்பு நிதியாக அவர்களின் வங்கி கணக்கில் செலுத்தப்படும் என்று முதலமைச்சர் அறிவித்துள்ளார்.

இது தொடர்பாக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்,

* கொரோனா நோய்த் தொற்றினால் பெற்றோர்களை இழந்து, ஆதரவின்றி தவிக்கும் குழந்தைகளுக்கு, அவர்களது பெயரில் தலா 5 இலட்சம் ரூபாய் வைப்பீடு செய்யவும், அந்தக் குழந்தை 18 வயது நிறைவடையும் போது, அந்தத் தொகை அந்தக் குழந்தைக்கு வட்டியோடு வழங்கிடவும்,

* பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அரசு இல்லங்கள் மற்றும் விடுதிகளில் முன்னுரிமை அடிப்படையில் தங்குவதற்கு இடம் வழங்கப்படும்.

* இக்குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு வரையிலான கல்விக் கட்டணம் மற்றும் விடுதிக் கட்டணம் உள்ளிட்ட அனைத்து செலவினங்களையும் அரசே ஏற்றிடவும், முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

* கொரோனா நோய்த் தொற்றினால் தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளோடு இருக்கும் தந்தை அல்லது தாய்க்கு உடனடி நிவாரணத் தொகையாக மூன்று இலட்சம் ரூபாய் வழங்கப்படும்

* அரசு காப்பகம் அல்லது விடுதிகளில் இல்லாது, உறவினர் / பாதுகாவலரின் ஆதரவில் வளரும் குழந்தைகளின் பராமரிப்புச் செலவாக, மாதந்தோறும் தலா 3 ஆயிரம் ரூபாய் உதவித்தொகை, அவர்கள் 18 வயது நிறைவடையும் வரையில் வழங்கப்படும்.

* ஏற்கெனவே தாய் அல்லது தந்தையை இழந்து, தற்போது கொரோனா நோய்த்தொற்றினால் மற்றொரு பெற்றோரையும் இழந்த குழந்தைகளுக்கும் ரூபாய் 5 இலட்சம் அவர்களது பெயரில் வைப்பீடு செய்யப்படும்.

* ஒவ்வொரு குழந்தைக்கும் வழங்கப்படும் உதவித் தொகை, அவர்களது கல்வி மற்றும் வளர்ச்சியும், ஒரு சிறப்புக் குழுவால் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படும்.

* அனைத்து அரசு நலத்திட்டங்களும் முன்னுரிமை அடிப்படையில் இக்குழந்தைகளுக்கும், நோய்த் தொற்றினால் கணவன் அல்லது மனைவியை இழந்து, குழந்தையுடன் இருக்கும் பெற்றோருக்கும் வழங்கப்படும்.

என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் இந்த நிவாரண உதவிகள் ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்றவாறு வழங்குவது குறித்த வழிகாட்டி நெறிமுறைகள் வகுத்து வெளியிட, கூடுதல் தலைமைச்செயலாளர், நிதித்துறை அவர்களது தலைமையில் வழிகாட்டுதல் குழு ஒன்று சமூக நலத்துறைச்செயலர் உள்ளிட்ட அலுவலர்கள் மற்றும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் / அமைப்புகளைச் சார்ந்தவர்களைக் கொண்டு அமைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.


Share this:

Related posts

கைலாசாவிற்கு வர இந்த மூணு ஊர்காரங்களுக்கு முன்னுரிமை… நித்தியின் தமிழ்நாட்டு பாசம்…!!

AMARA

தினசரி சாப்பாட்டு செலவு 25 கோடியா ?? முதல்வரிடம் கணக்கு கேட்கும் கம்யூனிஸ்ட்…

MANIMARAN M

மத மோதலை தூண்டிய பாஜக… எஸ்.பி. வருண்குமார் மாற்றத்திற்கு எதிராக குவியும் கண்டனங்கள்…!!

NEWSKADAI

“கிளாஸ் சோடோ பாகர் ஜாவ்” : தமிழக அரசியலில் புயலை கிளப்பிக் கொண்டிருக்கும் ஹிந்தி…

MANIMARAN M

15 வயது சிறுமிக்கு 2 ஆண்டுகளாக பாலியல் வன்கொடுமை… தலைமறைவான அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வுக்கு வலைவீச்சு…!!

NEWSKADAI

இரும்புப் பெண்மணி மகேஸ்வரிக்கு சல்யூட் அடித்த கலெக்டர்…

MANIMARAN M