Newskadai.com
தமிழ்நாடு

தென் மாவட்டங்களை சுற்றி வளைத்த கொரோனா… தில்லாக ஆய்வுக்கு புறப்பட தயாராகும் எடப்பாடியார்…!!

Share this:

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வருகிறார். தற்பொழுது தென் மாவட்டங்களில் ஆய்வு பணியை மேற்கொள்ள இருக்கும் முதல்வர், வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி இராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்ய இருக்கிறார்.

இதற்காக 21 ஆம் தேதி மாலை விமானம் மூலம் சென்னையிலிருந்து மதுரை வரும் முதல்வர் மறுநாள் இராமநாதபுரம் செல்கிறார். 22 ஆம் தேதி காலை இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் குறித்து ஆய்வு செய்யவுள்ளார். பின்னர் பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்து, ஏழை எளிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார்.

அதைத் தொடர்ந்து மாலை தூத்துக்குடிச் சென்று அங்கு ஆய்வு பணியை மேற்கொள்ளவுள்ளார். அன்றிரவு தூத்துக்குடியிலிருந்து நாகர்கோவில் செல்லும் முதல்வர் 23 ஆம் தேதி காலை கன்னியாகுமரியிலும், மாலை விருதுநகரிலும் கொரோனா தடுப்புப் பணிகள் மற்றும் வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து ஆய்வு செய்தும், பல்வேறு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தும், ஏழை எளிய பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவுள்ளார்.


Share this:

Related posts

வேலையில்லனா என்ன பாஸ்…!! பட்டதாரிகளுக்கு முன்னுதாரணமாக மாறிய அசத்தல் இளைஞர்கள்..!!

MANIMARAN M

பூஜை பொருட்கள் வாங்க சென்றவரின் புடவை இருசக்கர வாகனத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழப்பு…!!

MANIMARAN M

நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு… ஜலகண்டாபுரம் பேரூராட்சியை முடக்க ஆட்சியர் உத்தரவு…!

AMARA

பேருந்து கட்டணம் உயர்த்தப்படாது : அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் உறுதி…

MANIMARAN M

“இந்த ஐடியா நமக்கு வராம போச்சே ” பெண்கள் நடத்திய தினுசான போராட்டம்

MANIMARAN M

அடப்பாவிகளா: கொரோனாவை மறந்து குஷியாக ‘குளியல்’… ஏற்காட்டில் அரங்கேறிய அவலம்…!

THAVAMANI NATARAJAN