கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்வதற்காக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்று பயணம் மேற்கொண்டு வருகிறார். திருநெல்வேலி, கோயமுத்தூர், ஈரோடு, திண்டுக்கல், வேலூர் என பல மாவட்டங்களிலும் நேரடியாக சுற்றுப்பயணம் செய்து கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்தும் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், புதிய திட்டங்களின் அறிவிப்புகளையும் வெளியிட்டு வருகிறார்.
இதைத் தொடர்ந்து இன்று கடலூர், நாகை மாவட்டங்களில் ஆய்வு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார். இன்று காலை முதல்வர் பழனிசாமி கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்கிறார். அங்கு புதிய திட்டப்பணிகளுக்கான அறிவிப்புகளையும் வெளியிடுகிறார்.
பின்னர் நாகப்பட்டினம் மாவட்டத்திற்கு செல்கிறார். அங்கு கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துதல் மற்றும் வளர்ச்சிப் பணிகள் குறித்த ஆய்வை மேற்கொள்வார். பிற்பகல் நடக்க இருக்கும் நாகை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட சுகாதாரத் துறை அதிகாரிகளுடனான ஆய்வுக் கூட்டத்தில் பங்கேற்க உள்ளார்.