பல்வேறு மாவட்டங்களில் சுற்று பயணம் மேற்கொண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை ஆய்வு செய்து வரும் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று கடலூர், நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஆய்வை மேற்கொண்டார். கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று காலை ஆய்வில் ஈடுபட்டார்.
மேலும் படிக்க : http://வேகமெடுக்கும் கொரோனா… நாகை, கடலூரில் முதல்வர் இன்று ஆய்வு…!!
பின்னர் கடலூர் மாவட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் கூட்டமைப்பு நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்த பின் கடலூர் துறைமுகத்தில் வணிகக் கப்பல் போக்குவரத்து விரைவில் துவங்கப்படும் என்று அறிவிப்பு செய்தார்.
மாலை நாகப்பட்டினம் வந்தடைந்த முதல்வர் அங்கு மாவட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் மற்றும் கொரோனா நோய்த் தடுப்பு பாதுகாப்பு நடவடிக்கைகள், நிவாரணப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வில் ஈடுபட்டார். பின்னர் நாகை மாவட்டத்தில் ஏழை, எளிய மக்களுக்கு பல்வேறு அரசுத் துறைகள் சார்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
பின்னர் நாகை மாவட்டத்தில் விரைவில் உணவு பூங்கா மற்றும் ரெடிமேட் ஜவுளி பூங்கா அமைக்கப்படும் என்று அறிவித்தார். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியர் ப்ரவீன் பி நாயர், நாகை தொகுதி எம்.எல்.ஏ தமிமுன் அன்சாரி மற்றும் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் ஆகியோர் பங்குக் கொண்டனர்.