Newskadai.com
அரசியல்

தமிழகத்தை வஞ்சிக்கும் ரிசர்வ் வங்கியின் நியாயமற்ற கடன் கொள்கைக்கு முதல்வர் எதிர்ப்பு… பிரதமருக்கு கடிதம்…!!

Share this:

உலக பெருந்தொற்று கொரோனாவால் உலக நாடுகளில் கடும் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ளது. இந்தியாவும் கொரோனாவினால் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. இதில் தமிழகம் மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த 4 ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட கடன் கொள்கையில் கடன் வரவை தடுக்கும் நடவடிக்கைகளை நீக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கடிதம் எழுதியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், முன்னுரிமை பிரிவுகளுக்கு கடன் வழங்குவது தொடர்பாக 4ஆம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட முதன்மை உத்தரவுகள், மிகுந்த குழப்பமான மற்றும் பாரபட்சமான அம்சங்களை கொண்டுள்ளன. குறிப்பாக அந்த உத்தரவின் 7ஆம் பிரிவின் உள்ள குறைந்த கடன் பெறும் மாவட்டங்களின் முன்னுரிமை பிரிவுகளுக்கு கடனை வழங்க வகை செய்கிறது. ஆனால் இந்த கட்டமைப்பில் பல மாவட்டங்கள் கடன் பெற முடியாமல் போகின்றன என்பது ஆட்சேபனைக்கு உரியதாக உள்ளது.

Reserve bank

தமிழகத்தில் உள்ள 32 மாவட்டங்களுமே முன்னுரிமை பிரிவில் அதிக கடன் பெறும் மாவட்டங்களாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. வேறு எந்த மாநிலத்திலுமே ஊக்கத்தொகை பெறாத மாவட்டங்களாக இவ்வளவு அதிக எண்ணிக்கையில் மாவட்டங்கள் வகைப்படுத்தப்படவில்லை. அந்த வகையில் ரிசர்வ் வங்கியின் திட்டத்தில் இருந்து தமிழக மாவட்டங்கள் விலக்கப்பட்டதாக தெரிகிறது. தமிழக மாவட்டங்களில் அதிக கடன் பரிமாற்றம் உள்ளது. கடின உழைப்பு, விடாமுயற்சி, வீடு மற்றும் தொழில்களுக்கான கடனை சரியான நேரத்தில் திரும்ப அளிப்பது ஆகிய அம்சங்கள் இங்கு அதிகம் உள்ளது. விதியை சரியாக பின்பற்றும் அவர்களுக்கு அளிக்கப்படும் கடனை நிறுத்தக் கூடாது.

எனவே ரிசர்வ் வங்கியின் இந்த கொள்கை நியாயமற்றதாகவும், பிற்போக்கு தன்மை உடையதாகவும் உள்ளது. கொரோனாவால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், தடை இல்லாத கடன் வழங்குதல்தான் இங்குள்ள பொருளாதாரத்தை புதுப்பிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. எனவே, இதுபோன்ற முடிவை உடனடியாக திரும்பப்பெற இந்திய ரிசர்வ் வங்கிக்கு நீங்கள் உத்தரவிட்டு இதற்கு முன்பிருந்த மதிப்பீட்டு முறையை மீட்டமைக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.


Share this:

Related posts

ஸ்டாலின் இதயத்தை நொறுக்கிய திடீர் மரணம்… மனமுடைந்து தவிப்பதாக உருக்கமான அறிக்கை….!!

AMARA

எகிறி அடிக்கும் பாஜக… அமைதி காக்கும் அதிமுக… கொதிக்கும் தொண்டர்கள்…

NEWSKADAI

ஊரடங்கு நீட்டிப்பா?… மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசனை…!

AMARA

5 நதிகளை தூய்மைப்படுத்த அதிரடி திட்டம்…. மத்திய அரசின் புதிய அறிவிப்பு…!!

THAVAMANI NATARAJAN

3 1/2 மணி நேரத்தில் 7 மசோதாக்களை நிறைவேற்றி சாதனை படைத்த பாஜக அரசு

MANIMARAN M

பிரதமரிடம் மனு போட்ட முதல்வர்.. நாம எப்பவுமே நிறைய தான் கேட்போம்… ஆனா அவங்க கொடுக்கனும்ல…

MANIMARAN M