Newskadai.com
அரசியல்

மோடி திட்ட மோசடிக்கு.. இந்த அறிவிப்புதான் காரணம்…!! முதல்வரின் அதிரடி குற்றச்சாட்டு…

Palani
Share this:

விவசாயிகளுக்கு நிதியுதவி வழங்கும் பிரதம மந்திரியின் கிசான் திட்டத்தில் 13 மாவட்டங்களில் முறைகேடுகள் நடந்துள்ளது கண்டறியப்பட்டுள்ளதால் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மிகக் குறுகிய காலத்தில் அதாவது கடந்த 4 மாதங்களில் மட்டும் ஐந்து லட்சம் பேர் புதிய உறுப்பினர்களாக சேர்ந்ததால் சந்தேகமடைந்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் முறைகேடு நடந்திருப்பது கண்டறியப்பட்டு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த முறைகேட்டிற்கு முக்கிய காரணமே மத்திய அரசு அறிவித்த ஒரு அறிவிப்பு தான். ஆதார் மற்றும் குடும்ப அட்டையை அடிப்படையாகக் கொண்டு விவசாயிகள் தாமாகவே பதிவு செய்யலாம் என அறிவித்ததால் போலி நபர்கள் விவசாயிகளாக தங்களை பதிவு செய்து பலன் அடைந்து உள்ளார்கள். கிசான் வழக்கு சம்பந்தமாக 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டுக்கு உதவிய 34 அரசு அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒப்பந்த ஊழியர்கள் 81 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முறைகேட்டில் ஈடுபட்டு தவறு செய்த அனைவர் மீதும் சட்டரீதியாக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். கிணறு வெட்ட பூதம் கிளம்பியது போல ஆரம்பத்தில் ஒரு சில மாவட்டங்களில் லட்சங்களில் நடந்திருந்த கிசான் திட்ட முறைகேடு தற்போது 150 கோடிகளை தாண்டி சென்று கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

எம்.ஜி.ஆர். குடும்பத்தில் ‘கொரோனா’ மரணம்… சோகத்தில் துடிதுடிக்கும் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ்…!

AMARA

“தேனி மக்களின் கனவை நிறைவேற்றியே தீருவேன்”… மண்ணின் மைந்தன் ரவீந்திரநாத் குமார் எம்.பி. உறுதி…!!

AMARA

எஸ்.வி.சேகரின் ஆசையை விரைவில் அதிமுக அரசு நிறைவேற்றும்

THAVAMANI NATARAJAN

திமுக பொதுச்செயலாளராகிறார் துரைமுருகன்?… செப்.9-ல் கூடுகிறது திமுக பொதுக்குழு…!

AMARA

நீங்க ஊரடங்கை நீட்டிச்ச வரைக்கும் போதும்…. உடனே எல்லாத்தையும் ஓபன் பண்ணுங்க… கொந்தளித்த வைகோ…!!

MANIMARAN M

இவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுங்கள்… சட்டமன்றத்தில் அதிரடி கோரிக்கை வைத்த ஸ்டாலின்…!

AMARA