Newskadai.com
தமிழ்நாடு

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர உடனடி இ-பாஸ்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!!

Share this:

சென்னையில் தற்போது கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், தென் மாவட்டங்களில் தொற்றின் தீவிரம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து தமிழக அரசு மேற்கொண்டு வரும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் பழனிசாமி மாவட்டம் தோறும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். நேற்று திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர், விவசாயிகள் மற்றும் சிறு, குறு வர்த்தகர்களுடன் ஆலோசனை நடத்தினர்.

Palanisamy

 

இன்று நெல்லை மற்றும் தென்காசி மாவட்டங்களில் நடைபெற்று வரும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார். நெல்லையில் 196.75 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திடங்களுக்கு அடிக்கல் நாட்டிய முதலமைச்சர், தென்காசியில் 78.77 கோடி மதிப்பிலான புதிய திட்டங்களை தொடங்கிவைத்தார்.

அதன் பின்னர் ஆலோசனை கூட்டத்தில் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தமிழகத்தில் முறையாக செல்வோருக்கு வேகமாக இ-பாஸ் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், வெளி மாநிலத்தில் இருந்து தொழிலாளர்களை அழைத்து வர உடனடியாக பாஸ் வழங்கப்படுவதாகவும் தெரிவித்தார். அதுமட்டுமின்றி தென் மாவட்டங்களில் புதிய தொழில் தொடங்க முன் வந்தால் நிலத்தின் மதிப்பில் பாதியை மானியமாக அரசு வழங்கும் என தெரிவித்த முதல்வர், இந்தியாவிலேயே அதிக முதலீட்டை ஈர்க்கும் மாநிலமாக தமிழகம் உள்ளதை பெருமிதத்துடன் சுட்டிக்காட்டினார்.


Share this:

Related posts

கட்டாய கட்டண வசூல் : 18 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்…

MANIMARAN M

#CORONAVIRUS தினசரி பாதிப்பு 500,1000 என உயர்ந்து மாவட்டங்களை பதறவைக்கும் கொரோனா…!!

NEWSKADAI

தமிழக மீனவர்கள் மீது கொடூர தாக்குதல் : நடுக்கடலில் நடந்தேறிய பயங்கரம்…

MANIMARAN M

இ-பாஸ் ரத்து… பொது போக்குவரத்து தொடக்கம்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்….!!

AMARA

சுதந்திர தினத்தை வீட்டிலேயே கொண்டாடுங்க…. வெளியில் வராதீங்க… முதல்வர் அறிவிப்பு.

MANIMARAN M

சாத்தான்குளம் இரட்டை கொலை வழக்கு: சீலிடப்பட்ட கவரில் சிபிஐ விசாரணை அறிக்கை தாக்கல்…!!

MANIMARAN M