Newskadai.com
தமிழ்நாடு

#BREAKING விரைவில் தொடங்குங்கள்… முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் இருந்து வந்த முக்கிய அறிவிப்பு…!

MK Stalin CM
Share this:

தமிழகத்திலேயே ஆக்ஸிஜன், தடுப்பூசி மருந்துகள், உயிர் காக்கும் மருந்துகளை உற்பத்தி செய்ய உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். தமிழ்நாட்டில் கொரோனா நோய்த் தொற்றினால் பாதிக்கப்படும் நோயாளிகளுக்கு அத்தியாவசியமாகத் தேவைப்படும் ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்கும் வகையில், ஒரு நிரந்தரத் தீர்வாக நம் மாநிலத்திலேயே ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களைத் துவக்க மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ஆணையிட்டுள்ளார்கள்.

இதுமட்டுமன்றி, மருத்துவ உயர் தொழில்நுட்ப சாதனங்கள், ஆக்சிஜன் செறிவூட்டிகள், தடுப்பூசிகள் மற்றும் கொரோனா தொடர்பான மருந்துகள் உற்பத்தியை நம் மாநிலத்திலேயே உருவாக்குவதற்கும், தொழில் கூட்டு முயற்சிகளை உருவாக்கவும் உத்தரவிட்டுள்ளார்கள்.

Corona virus vaccine

இதனடிப்படையில் தொழில் துறையின்கீழ் இயங்கும் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனம் (TIDCO), மேற்காணும் அத்தியாவசிப் பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு ஆதரவையும், உதவிகளையும் அளிக்கும் என்றும், குறைந்தபட்சம் 50 கோடி ரூபாய் முதலீடு செய்யும் நிறுவனங்களுடன், டிட்கோ நிறுவனம் கூட்டாண்மை அடிப்படையில் (Joint venture) இவ்வாலைகளை நிறுவுவதற்கு விருப்பமுள்ள இந்திய மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களிடமிருந்து

விருப்பக் கருத்துகளை (Expression of Interest) 31-5-2021-க்குள் கோரியுள்ளது. அவ்வாறு பெறப்படும் விருப்பக் கருத்துகள் ஆய்வு செய்யப்பட்டு, ஆக்சிஜன், தடுப்பூசிகள் மற்றும் உயிர் காக்கும் மருந்துகள் உற்பத்தி உட்கட்டமைப்புகளை விரைவில் நிறுவிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.


Share this:

Related posts

நாளை முதல் 7 நாட்களுக்கு முழு ஊரடங்கு… ஜலகண்டாபுரம் பேரூராட்சியை முடக்க ஆட்சியர் உத்தரவு…!

AMARA

ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை…. உற்சாக வெள்ளத்தில் தூத்துக்குடி மக்கள்..!!

AMARA

குடும்பம் குடும்பமாக உயிரிழந்த தமிழர்கள்… மூணாறு நிலச்சரிவில் அதிகரிக்கும் மரணங்கள்…

MANIMARAN M

கொரோனா ஊரடங்கும், தளர்வுகளும் – இயல்புநிலைக்கு திரும்புகிறதா தமிழகம்..?

AFRIN

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும்… உயர் நீதிமன்றம் அதிரடி…!!

AMARA

“ஸ்டிரைக் செஞ்சா சம்பளம் கிடையாது”… ரேஷன் கடை ஊழியர்களுக்கு நேரடி எச்சரிக்கை..!!

MANIMARAN M