Newskadai.com
தமிழ்நாடு

இன்று முதல் ஆரம்பம்… கொரோனா நோயாளிகளுக்காக முதல்வர் தொடங்கி வைத்த சிறப்பு சேவை…!

stalin
Share this:

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு ரெம்டெசிவிர் மருந்து தமிழ்நாடு அரசால் வழங்கப்படும்போது, மருந்து விற்பனை செய்யப்படக்கூடிய இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கவும், அவ்வாறு வழங்கப்படும் மருந்து தவறான முறையில் விற்பனை செய்யப்படுவதைத் தடுக்கவும், மருத்துவமனைகள் மூலமாக அதனை வழங்கிட வேண்டுமென்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் 16-5-2021 அன்று ஆணையிட்டார்கள்.

இதன்படி, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் தனியார் மருத்துவமனைகள் இணையதளத்தில் பதிவு செய்து, ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் விவரங்களை அளித்து, ரெம்டெசிவிர் மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கான வசதி tnmsc.tn.gov.in என்ற இணையதளத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது. பல்வேறு மாவட்டங்களிலிருந்து பதிவு செய்யும் மருத்துவமனைகளுக்கு, சென்னை, மதுரை, கோவை, சேலம், திருச்சி, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகள் வழங்கப்படும்.

remdisivir

இந்த முறையில் இதுவரை 343 தனியார் மருத்துவமனைகள் பதிவு செய்துள்ளன. இவற்றில், 151 மருத்துவமனைகள் ரெம்டெசிவிர் மருந்துக்கான கோரிக்கைகளை நோயாளிகளின் விவரங்களுடன் பதிவு செய்துள்ளன. இவற்றிற்கு இந்த மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. இதனை இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை ஜவஹர்லால் நேரு உள்விளையாட்டு அரங்கில் உள்ள விற்பனை மையத்தில் தொடங்கி வைத்தார். இந்த நிகழ்வில் முதற்கட்டமாக 25 மருத்துவமனைகளுக்கு 960 ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகள் வழங்கப்பட்டன.

இதில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத் துறை அமைச்சர் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன், சட்டமன்ற உறுப்பினர் பரந்தாமன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகத்தின் மேலாண்மை இயக்குநர் உமாநாத் ஆகியோர் பங்கேற்றனர்.


Share this:

Related posts

இதைச் செய்தாலே போதும் கொரோனா கிட்ட நெருங்காது… முதல்வர் மு.க.ஸ்டாலின் அட்வைஸ்…

AMARA

ஈ-பாஸால் எல்லாம் நாசமா போச்சு: குமுறும் விவசாயிகள், சிறு தொழில் முனைவோர்…

MANIMARAN M

கொரோனா ஊரடங்கின் தளர்வுகள் என்னென்ன..?

AFRIN

நாகை கடைக்காரர்களே உஷார்: வாடிக்கையாளர்கள் தவறு செஞ்சாலும் உங்களுக்குத் தான் அபராதம்… நகராட்சி அதிரடி உத்தரவு!!

MANIMARAN M

பிஎஸ்பிபி பள்ளி ஆசிரியர் மீது தொடரும் பாலியல் புகார் – மற்றொரு ஆசிரியர் கைது…!

AFRIN

அமைச்சர் ஓ எஸ் மணியன் மனைவி உடல் நலக்குறைவால் மரணம்…

MANIMARAN M