Newskadai.com
அரசியல்

பரபரப்பில் அதிமுக…. தனித்தனியே ஆதரவாளர்களை சந்திக்கும் ஓபிஎஸ் இபிஎஸ்…

Share this:

முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகும் என்ற அதிமுக தொண்டர்களின் எதிர்ப்பார்ப்போடு நடைபெற்ற அதிமுக செயற்குழு கூட்டத்தில் தொண்டர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஐந்து மணி நேரம் நடைபெற்ற செயற்குழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை வரும் அக்டோபர் 7ம் தேதி எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் இருவரும் சேர்ந்து அறிவிப்பார்கள் என தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியையும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தையும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் என தனித்தனியாக சந்தித்து வருகின்றனர். மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

இதனைத் தொடர்ந்து துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் சந்தித்து ஆலோசனை நடத்தினார். செயற்குழு கூட்டம் முடிந்த நிலையில் இராண்டாவது நாளாக தனது ஆதரவாளர்களுடன் பன்னீர் செல்வம் ஆலோசனை நடத்தி வருவது அரசியல் வட்டாரங்களில் பல யூகங்களுக்கு வித்திட்டு வருகிறது.


Share this:

Related posts

நீட் தேர்வை நடத்த முடியாதுன்னு அறிவீங்க… அடுத்தடுத்து அதிமுகவுக்கு நெருக்கடி கொடுக்கும் ஸ்டாலின்…!!

AMARA

சும்மா கடிதம் எழுதி ஏமாத்தாதீங்க… உச்ச நீதிமன்றத்தில் வழக்கு போடுங்க… அதிமுக அரசை உசுப்பிவிடும் ஸ்டாலின்…!!

MANIMARAN M

“பாஜகவில் இணையவில்லை”… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் அதிரடி விளக்கம்…!

AMARA

கலைவாணர் அரங்கத்தில் இன்று தொடங்குகிறது சட்டமன்ற கூட்டத் தொடர்…

MANIMARAN M

“அது எல்லாம் முடிந்து போன விவகாரம்”… ஆர்.பி.உதயக்குமாரை அசிங்கப்படுத்திய எடப்பாடியார்…!!

MANIMARAN M

இன்னும் எத்தனை உயிர்களை இழக்கப்போகிறோம்?… தொடரும் நீட் தேர்வு தற்கொலையால் தலைவர்கள் கொந்தளிப்பு…!!

AMARA