Newskadai.com
அரசியல்

கொரோனாவை அடித்து விரட்ட பலே திட்டம்… 2,000 மினி கிளினிக் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…!!

Share this:

உலக அளவில் தீயாய் பரவி வரும் கொரோனா தொற்றுக்கு இந்தியாவை ஆட்டி படைக்கிறது. படிபடியாக மெல்ல அதிகரிக்கும் கொரோனா தொற்றால் 3வது இடத்தில் இருந்த இந்திய தற்போது இரண்டாவது இடத்தில் உள்ளது. கொரோனாவுக்கு இன்னும் முறையான தடுப்பு மருந்து கண்டறியப்படாத நிலையில், சமூக இடைவெளியும், மாஸ்க்கும் மட்டுமே நமக்கான பாதுகாப்பு கவசமாக மாறியுள்ளது.

Edappadi

இந்நிலையில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் விதமாக செப்டம்பர் 30ம் தேதி வரை பல்வேறு தளர்வுகளுடன் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பரிசோதனைகளை அதிகரிப்பதன் மூலமாகவும், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி சிகிச்சை அளிப்பதன் மூலமாகவும் தொற்றைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொண்டு வருகிறது.

அதன் ஒருபகுதியாக மருத்துவர்கள் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமைச் செயலகத்தில் இன்று ஆலோசனை நடத்தினர். இதில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் ராதாகிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர்.

Corona virus

இந்த ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முதலமைச்சர், தமிழகத்தில் கொரோனா பரவல் மற்ற மாநிலங்களை விட குறைவாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் அதிக அளவில் கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள தமிழகம் முழுவதும் 2 ஆயிரம் மினி கிளினிக் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், அந்த மினி கிளினிக்கில் செவிலியர், மருத்துவ உதவியாளர் ஆகியோர் இடம் பெறுவர் என்றும் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

காய்கறி மாலையோடு சட்ட நகல் கிழிப்பு… வேளாண் மசோதாவிற்கு வேறமாதிரியான போராட்டம்..!!

MANIMARAN M

இளைஞர்களுக்கு மிகப்பெரிய ஆபத்து… தமிழக அரசுக்கு அபாய எச்சரிக்கை விடுத்த சீமான்…!

MANIMARAN M

“அது எல்லாம் முடிந்து போன விவகாரம்”… ஆர்.பி.உதயக்குமாரை அசிங்கப்படுத்திய எடப்பாடியார்…!!

MANIMARAN M

பாஜகவில் அடியெடுத்து வைத்த உடனேயே இப்படியா?…. அண்ணாமலை மீது பாய்ந்தது வழக்கு…!!

NEWSKADAI

எம்.ஜி.ஆர். குடும்பத்தில் ‘கொரோனா’ மரணம்… சோகத்தில் துடிதுடிக்கும் இ.பி.எஸ். – ஓ.பி.எஸ்…!

AMARA

மக்களின் மீதான பொருளாதார வேட்டை : ரத்தத்தை உறிஞ்சும் அரசுகள் – ஸ்டாலின் கடும் தாக்கு….!!

MANIMARAN M