கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு பல தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் கல்லூரி இறுதி தேர்வை தவிர பிற பாடங்களுக்கான பருவ தேர்வை ரத்து செய்வதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
கல்லூரி இறுதி பருவத் தேர்வை ரத்து செய்ய முடியாது என்பதில் யூஜிசி பிடிவாதமாக இருப்பதால் அதை மட்டும் ரத்து செய்ய இயலவில்லை. மேலும் தேர்வு கட்டணம் செலுத்தி காத்திருக்கும் பிற மாணவர்களுக்கு ரத்து செய்யப்பட்ட பருவத் தேர்வுகளுக்கான மதிப்பெண்கள் யுஜிசியின் ஏஐசிடிஇ வழிகாட்டுதலின் படி வழங்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். பல்கலைக்கழக மானியக்குழு பரிந்துரைகளின் படி தமிழக உயர் கல்வித்துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.