Newskadai.com
அரசியல்

“எஸ்.பி.பி. உடலுக்கு முழு அரசு மரியாதை”… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு…!

Share this:

தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாளம் உட்பட 16 மொழிகளில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ஒட்டுமொத்த இந்தியாவையே தனது குரலால் மகிழ்வித்த எஸ்.பி.பாலசுப்ரமணியம் இன்று மதியம் 1.04 மணிக்கு காலமானார். சென்னை சூளைமேட்டில் உள்ள எம்ஜிஎம் ஹெல்த் கேர் மருத்துவமனையில் அவருடைய உயிர் பிரிந்ததை அடுத்து நுங்கம்பாக்கம் காம்தார் நகரில் உள்ள அவரது வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டது. திரையுலகினர், அரசியல் கட்சி பிரமுகர்கள், ரசிகர்கள் என ஆயிரக்கணக்கானோர் எஸ்.பி.பி. உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பிரதமர் மோடி முதல் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரை பல அரசியல் கட்சி தலைவர்களும், இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னட திரையுலகைச் சேர்ந்த திரைப்பிரபலங்கள் பலரும் எஸ்.பி.பி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். தற்போது நுங்கம்பாக்கம் இல்லத்தில் இருந்து எடுத்துச் செல்லப்பட்ட எஸ்.பி.பி.யின் உடல் செங்குன்றம் அருகேயுள்ள தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டில் வைக்கப்பட்டுள்ளது. அங்கு நாளை காலை அவருடைய உடலுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்படுகின்றன.


இந்நிலையில் சற்று நேரத்திற்கு முன்பு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். தமிழ்நாடு மட்டுமின்றி இந்திய மக்கள் அனைவரின் மனதிலும் நீங்கா இடம் பிடித்த திரு.எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்களின் புகழுக்கு பெருமை சேர்க்கும் வகையில் அன்னாருக்கு காவல் துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்படும் என தெரிவித்துள்ளார். திமுக தலைவர் ஸ்டாலின் எஸ்.பி.பி-யின் உடலை முழு அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்திருந்த நிலையில், முதலமைச்சர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Share this:

Related posts

அக்.5 முதல் குடைச்சல் ஆரம்பம்… மீண்டும் சிக்கலில் சிக்கிய ஆ.ராசா, கனிமொழி…!

NEWSKADAI

“மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக்குவோம்”… திமுக பொதுக்குழு கூட்டத்தில் 13 தீர்மானங்கள் நிறைவேற்றம்…!!

NEWSKADAI

தமிழக பாஜக மூத்த தலைவருக்கு கொரோனா… அதிர்ச்சியில் கமலாலயம்…!

AMARA

“பூனைக்குட்டி வெளியே வந்தது”… ஒத்த ட்வீட்டில் உண்மையை உளறிய குஷ்பு… சற்று நேரத்தில் பாஜகவில் சங்கமம்??

MANIMARAN M

இன்று தெரிந்துவிடும் அடுத்த முதல்வர் யாரென்று… முடிவுக்கு வரபோகும் உட்கட்சி பூசல்…

MANIMARAN M

யோகி இமேஜை டேமேஜ் செய்த பாஜக எம்.எல்.ஏ… ஊழல் தலைவிரித்தாடுவதாக ஆளும் கட்சிக்காரரே குற்றச்சாட்டு….!

NEWSKADAI