Newskadai.com
தமிழ்நாடு

நீட் தேர்வால் தற்கொலை… அரியலூர் மாணவர் குடும்பத்திற்கு முதல்வர் நிதியுதவி…!!

Share this:

அரியாலூர் மாவட்டம் செந்துறை அருகே எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வுக்கு தயராகிக்கொண்டிருந்த நிலையில், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். கடந்த இரண்டு முறை நீட் தேர்வில் தோல்வியடைந்த நிலையில், 3வது முறையாக விக்னேஷ் தேர்வுக்கு தயாராகி வந்துள்ளார். ஆனால் கடந்த சில நாட்களாகவே மூன்றாவது முறையாவது எக்ஸாமில் பாஸ் செய்து டாக்டர் சீட் கிடைக்குமா? என்ற மன உளைச்சலில் இருந்து வந்துள்ளார். இதனால் தான் மாணவன் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டது.

நீட் தேர்வு மன உளைச்சலால் அடுத்தடுத்து மாணவர்கள் தற்கொலை செய்து கொள்வது தமிழக மக்களை கொதிப்படையச் செய்துள்ளது. நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் வலுத்து வருகிறது. இந்நிலையில் நீட் தேர்வால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாக உயிரிழந்த விக்னேஷ் குடும்பத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ரூ.7 லட்சம் நிதி உதவி அறிவித்துள்ளார். மேலும் விக்னேஷ் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு கல்வி தகுதிக்கேற்ப அரசு பணி வழங்கப்படும் என்றும் உறுதி அளித்துள்ளார்.

vignesh
 

மன உளைச்சலால் மாணவன் விக்னேஷ் தற்கொலை செய்து கொண்டதை அறிந்து துயரம் அடைந்தேன், இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்த மாணவனின் குடும்பத்திற்கு என ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன் என முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.


Share this:

Related posts

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சி… அதிரடியாக உயரும் செல்போன் கட்டணங்கள்…!!

THAVAMANI NATARAJAN

இந்திய ரேஷன் கடைகளில் முதன்முறையாக… தமிழகத்தில் வருகிறது… மொபைல் ரேஷன் ஷாப்…

MANIMARAN M

ஒருவேளை உணவுக்கூட கிடைக்காமல் அல்லாடும் கொரோனா நோயாளிகள்…. சீர்காழி அரசு மருத்துவமனையின் அவலம்…!!

MANIMARAN M

சேலத்தில் கொரோனாவுக்கு சூப்பர் ட்ரீட்மெண்ட்… திறந்தாச்சு சித்த மருத்துவ மையம்…!!

THAVAMANI NATARAJAN

டாஸ்மாக்கால் கொரோனா தொற்று? 50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்…

MANIMARAN M

தொடருமா அதிமுக – பாஜக கூட்டணி ?… கமலாலயத்தில் இன்று நடக்கிறது செயற்குழு கூட்டம்…!!

MANIMARAN M