Newskadai.com
தமிழ்நாடு

நாளை முதல் ரேசன் கடைகளில் இதுவும் இலவசம்… முதலமைச்சர் பழனிசாமியின் அதிரடி அறிவிப்பு…!

Share this:

தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் தீயாய் பரவி வருகிறது. நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் புதிய உச்சமாக 6,785 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தமிழகம் முழுவதும் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,99,749 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு இதுவரை தடுப்பு மருந்துகள் கண்டறியப்படாத நிலையில், முகக்கவசங்கள் அணிவதும், தனி மனித இடைவெளியை கடைபிடித்தலுமே தொற்றிலிருந்து தற்காத்து கொள்ள ஒரே வழியாக கூறப்பட்டுள்ளது.

Palaniswami
  

அதனால் தான் கொரோனா பெருந்தொற்றை தடுக்கும் நடவடிக்கையாக தமிழக அரசு நியாயவிலைக் கடைகளில் இலவசமாக முகக்கவசங்களை வழங்க திட்டமிட்டுள்ளது. இத்திட்டத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை தொடங்கி வைக்கிறார். தலையின் பின்புறம் கட்டிக் கொள்வது போல முகக்கவசம் வடிவமைக்கப்பட்டு, பருத்தித்துணியால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த முகக் கவசத்தைத் துவைத்து மீண்டும் மீண்டும் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தமிழகத்தில் 6 கோடியே 74 லட்சத்து 15 ஆயிரத்து 899 பெயர்கள் குடும்ப அட்டைகளில் உள்ளன. அவர்கள் ஒவ்வொருவருக்கும் இரண்டு முகக்கவசம் என்கிற கணக்கில் மொத்தம் 13 கோடியே 48 லட்சத்து 31 ஆயிரத்து 798 மறு பயன்பாட்டுத் துணி முகக்கவசங்கள் வழங்கப்பட உள்ளன.

தயார் நிலையில் உள்ள நான்கு கோடி முகக்கவசங்களை சென்னை மாநகராட்சி தவிர மற்ற பகுதிகளில் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மீதம் தேவைப்படும் முகக் கவசங்களைத் தயாரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்றும் நாளை முதல் நியாயவிலைக் கடைகளில் இலவச முகக்கவசம் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் மாஸ்க் அணியவேண்டும் என்றும், கட்டாயம் தனி மனித இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு அறிவுறுத்தியுள்ளது.


Share this:

Related posts

நாகையில் அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்த 3 பெண்கள் படுகாயம்…!!

MANIMARAN M

மேட்டூர் அணையின் “செஞ்சுரி தடுப்பு”… சட்டென குறைக்கப்பட்ட நீர்வரத்து…!!

THAVAMANI NATARAJAN

வெளிமாநில தொழிலாளர்களை அழைத்து வர உடனடி இ-பாஸ்… முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு…!!

AMARA

மோடி திட்டத்தில் கேடித்தனம்… நானும் ”விவசாயிதான்” என்று கோடிகணக்கில் கொள்ளை…

THAVAMANI NATARAJAN

இ-பாஸ் ரத்து… பொது போக்குவரத்து தொடக்கம்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்….!!

AMARA

நாகை மீன்வள பல்கலைக் கழக மாணவர் சேர்க்கை தேதி அறிவிப்பு…!!

MANIMARAN M