Newskadai.com
அரசியல்

“தமிழகத்தில் மும்மொழி கொள்கைக்கு இடமே கிடையாது”… முதலமைச்சர் பழனிசாமி அதிரடி…!!

Palani
Share this:

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 29ம் தேதி நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் புதிய கல்விக்கொள்கை 2020க்கு ஒப்புதல் அளித்தது. இதற்கு தமிழகத்தில் பல்வேறு அமைப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், புதிய கல்வி கொள்கை குறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அதிகாரிகளுடன் முதலமைச்சர் முதலைமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

Modi
 

இதற்கு முன்னதாக மும்மொழித்திட்டத்தை திணிக்கும் பாஜக அரசின் “தேசிய கல்விக் கொள்கை-2020” ஐ குறித்து முதலைமைச்சரின் நிலைப்பாடு என்ன என்பதை தெறிந்து கொள்ளவும், மும்மொழித்திட்டத்தை தமிழக அரசு முழுமையாக எதிர்க்க வேண்டும் என வலியுறுத்தியும் அனைத்துக்கட்சியின் சார்பில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று முதலமைச்சருக்கு கடிதம் ஒன்றையும் எழுதியுள்ளார்.

சுமார் 80 ஆண்டுகளாக இருமொழிக் கொள்கையில் தமிழக மக்கள் உறுதியாக உள்ளனர் என்றும் 1968 ஆம் ஆண்டு சட்டமன்ற தீர்மானத்தின் மூலம் தமிழக பாடத்திட்டத்தில் இருந்து இந்தி நீக்கப்பட்டுள்ளது என் முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார். தற்போது மத்திய அரசால் வெளியிடப்பட்டுள்ள புதிய கல்வி கொள்கையில் மும்மொழி கொள்கை இடம் பெற்று இருப்பினும், தமிழக அரசு அதை ஒருபோதும் அனுமதிக்காது என்றும், தொடர்ந்து இருமொழி கொள்கையே பின்பற்றப்படும் என்றும் திட்டவட்டமாக கூறியுள்ளார்.


Share this:

Related posts

திமுக முன்னாள் அமைச்சர் மரணம்… கொரோனாவிலிருந்து மீண்டவரை கொண்டு சென்ற எமன்…!!

AMARA

தனியாக வசிக்கும் மூதாட்டியிடம் கேவலமாக நடந்து கொண்ட பாஜக நிர்வாகி… குவியும் கண்டனங்கள்…!

NEWSKADAI

“திமுகவில் இருந்து நீக்கியது மகிழ்ச்சியளிக்கிறது”… அறிவாலயத்திற்கு அதிர்ச்சி கொடுத்த கு.க.செல்வம்…!!

NEWSKADAI

துணை முதல்வர் ஓ.பி.எஸ். திடீரென மருத்துவமனையில் அனுமதி… அதிர்ச்சியில் அதிமுக தொண்டர்கள்…!!

THAVAMANI NATARAJAN

இவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றுங்கள்… சட்டமன்றத்தில் அதிரடி கோரிக்கை வைத்த ஸ்டாலின்…!

AMARA

காய்கறி மாலையோடு சட்ட நகல் கிழிப்பு… வேளாண் மசோதாவிற்கு வேறமாதிரியான போராட்டம்..!!

MANIMARAN M