Newskadai.com
தமிழ்நாடு

மூணாறு நிலச்சரிவு: தமிழக குடும்பங்களுக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் அறிவிப்பு…!!

Share this:

கேரள மாநிலம் மூணாறு பகுதியில் உள்ள பெட்டிமுடி கிராமத்தில் கடந்த 7ம் தேதி பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. அதில் கண்ணன் தேவன் டீ எஸ்டேட்டில் தோட்ட தொழிலாளர்கள் வசித்து வரும் குடியிருப்பு பகுதிகள் மண்ணில் புதைந்தன. இந்த நிலச்சரிவில் 80 பேர் காணவில்லை என்ற தகவல் வெளியாயின.

தற்போது 13 நாட்களாக சேற்றில் புதையுண்டவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே 58 பேரின் உடல்கள் மீட்கப்பட்ட நிலையில், மேலும் 3 உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 11 பேர் உயிருடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதையடுத்து கடந்த வாரம் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்ட கேரள முதலமைச்சர் பினராயி விஜயன், நிலச்சரிவில் உயிரிழந்த குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் நிவாரணமும், தேயிலைத் தோட்டத் தொழிலாளர் குடும்பங்களுக்கு சொந்த நிலம் வழங்கி அரசு சார்பில் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும், உயிரிழந்தவர்களின் குழந்தைகளின் கல்விச் செலவை மாநில அரசு ஏற்கும் என்றும் அறிவித்திருந்தார்.

kerala

நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் கயத்தாறு பகுதியைச் சேர்ந்த தமிழர்களின் குடும்பமே அதிகம். அதனால் மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் பழனிசாமி நிவாரணத்தொகை அறிவித்துள்ளார். மூணாறு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த தமிழர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.3 லட்சமும், படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.1 லட்சமும் நிவாரணமாக அறிவித்துள்ளார்.


Share this:

Related posts

கொரோனாவிலிருந்து மீண்ட மூதாட்டியை பாதி வழியில் இறக்கிவிட்ட ஆம்புலன்ஸ் டிரைவர்… புற்றுநோய் உடன் போராடுபவருக்கு நேர்ந்த அவலம்… வீடியோ…!!

MANIMARAN M

8-வது படித்திருந்தால் போதும்..! சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை பார்க்கலாம்..!

AFRIN

தமிழகத்தில் செப்டம்பர் 30 வரை ஊரடங்கு நீட்டிப்பு??…. விரைவில் முதல்வர் அறிவிப்பை வெளியிட வாய்ப்பு…!!

AMARA

ரெடியா இருங்க ஜலகண்டாபுரம்… இன்னைக்கு வீட்டுக்கே வரப்போறாங்க… தூள் பறக்கும் தொற்று தடுப்பு…!

AMARA

ஃபேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பிற்கு நாளை முதல் தடை?… மத்திய அரசு அதிரடி…!

NEWSKADAI

தமிழகத்தில் கொரோனா… (30-08-2020) இன்றைய நிலை…!?

NEWSKADAI