Newskadai.com
அரசியல்

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவசாயி அம்மாள் உடல் நலக்குறைவால் காலமானார்..

edapadi mother passed away
Share this:

தமிழக முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிசாமியின் தாயார் தவுசாயி அம்மாள்(93) உடல்நலக்குறைவால் செவ்வாய்க்கிழமை அதிகாலை 1 மணியளவில் காலமானார். கடந்த சில தினங்களாக சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் நலம் குறைவு காரணமாக சிகிச்சைப் பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 1 மணியளவில் அவர் உயிரிழந்தார். இதனையடுத்து அவரது சொந்த ஊரான சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள சிலுவம்பாளையம் கிராமத்திற்கு உடல் கொண்டு செல்லப்பட்டு பொதுமக்கள் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது.

edapadi mother passed away

தென் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை ஆய்வு மேற்கொண்டிருக்கும் முதலமைச்சர் தனது தாயாரின் மறைவு செய்தி கேட்டு சேலம் வந்தடைந்தார். சிலுவம்பாளையம் வந்த முதலமைச்சர் பழனிசாமி தாயாரின் உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். மேலும் தமிழக அமைச்சர்கள் அன்பழகன், உடுமலை ராதாகிருஷ்ணன், செங்கோட்டையன், விஜயபாஸ்கர், தங்கமணி உள்ளிட்டோர் நேரில் அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சரின் தாயரின் மறைவிற்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Share this:

Related posts

ராஜஸ்தானில் பிஜேபி ஆட்சி ??? கண்ணாமூச்சி ஆட்டம் ஆடும் சச்சின்…

MANIMARAN M

நீட் தேர்வு விவகாரம்: பேரவையில் முதல்வர் – ஸ்டாலின் இடையே காரசார விவாதம்…!

AMARA

கொரோனாவை அடித்து விரட்ட பலே திட்டம்… 2,000 மினி கிளினிக் அமைக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு…!!

AMARA

என்னது அவரா?… மு.க.ஸ்டாலினை அதிர்ச்சியில் ஆழ்த்திய மரணம்… வேதனையை வெளிப்படுத்திய திமுக…!

AMARA

“நீங்க எல்லாம் பாஜகவுடன் தொடர்பு வச்சிருக்கீங்க”… காங்கிரஸ் சீனியர் தலைவர்கள் சீண்டிய ராகுல் காந்தி…!!

AMARA

அடுத்த வாரத்திலிருந்து அரசியல் சதுரங்கம் ஆரம்பம்… விடுதலை ஆகிறார் சசிகலா…!?

MANIMARAN M