Newskadai.com
தமிழ்நாடு

வெடிகுண்டு வீச்சில் கொல்லப்பட்ட காவலர் குடும்பத்திற்கு 50 லட்சம் நிதியுதவி… முதல்வர் அறிவிப்பு…

Edappadi
Share this:

ஸ்ரீவைகுண்டம் இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய பிரபல ரவுடி துரை முத்து நேற்று போலிஸ் எண்கவுண்டரில் சுட்டுக் கொல்லப்பட்டான். இந்த சம்பவத்தில் காவலர் சுப்ரமணியன் ரவுடிகளின் நாட்டு வெடிகுண்டுகள் தாக்குதலுக்கு பலியானர். உயிழந்த காவலர் சுப்ரமணியன் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். தூத்துக்குடி மாவட்ட காவல் சரகத்தில் பல கொலை, கொள்ளை வழக்குகளில் தேடப்படும் குற்றவாளி ரவுடி துரை முத்து. இவன் பேரில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல் துறையினரால் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றிருப்பவன்.

 

மேலும் படிக்க:http://போலீஸ் மீது வெடிகுண்டு வீச்சு… பிரபல ரவுடி என்கவுன்டர்… பதட்டத்தில் தூத்துக்குடி…

நேற்று வல்லநாடு மணக்கரை பகுதியில் ரவுடி துரை முத்துவும் அவனது கூட்டாளிகளும் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து போலீசார் அந்த இடத்தைச் சுற்றி வளைத்தனர். போலீசாரிடம் இருந்து தப்பித்து ஓடிய ரவுடி துரை முத்துவும், அவனது கூட்டாளிகளும் காவல்துறையினரை நோக்கி நாட்டு வெடிகுண்டுகளை வீசிய வண்ணம் சென்றனர். காவல்துறையினரும் விடாமல் துரத்தி சென்றனர். இதில் ரவுடிகள் வீசிய நாட்டு வெடிகுண்டுக்கு காவலர் சுப்பிரமணியன் பலியானார். தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் ரவுடி துரை முத்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். தப்பி சென்ற ரவுடி துரை முத்துவின் கூட்டாளிகள் மூவரை காவல்துறை இன்று கைது செய்துள்ளது. இச்சம்பவத்தில் உயிரிழந்த காவலர் சுப்ரமணியன் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கவும், அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.


Share this:

Related posts

ஆன்லைன் வகுப்பில் மாணவிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்த ஆசிரியர்..! நடந்தது என்ன..?

MANIMARAN M

இ-பாஸ் ரத்து… பொது போக்குவரத்து தொடக்கம்… அதிரடி அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர்….!!

AMARA

மன்னார்குடின்னாலே பிரச்சனையா?… அரசு அதிகாரிகளின் மெகா ஊழலை அம்பலப்படுத்திய மக்கள்…!!

MANIMARAN M

கொரோனாவில் கொண்டாட்டம்: கறிவிருந்து வைத்து கூத்தடித்த வட்டாட்சியருக்கு ஆப்பு வைத்த ஆட்சியர்…!!

MANIMARAN M

குஷ்புவுக்கு போட்டியாக மோடி… சேலத்தில் தூள் பறக்கும் போஸ்டர்கள்…!

MANIMARAN M

“இந்த ஐடியா நமக்கு வராம போச்சே ” பெண்கள் நடத்திய தினுசான போராட்டம்

MANIMARAN M