Newskadai.com
தமிழ்நாடு

வரலாற்றில் முதன் முறையாக தேசிய கொடியேற்றிய தூய்மைப் பணியாளர்கள்…

Share this:

கொரோனாவை கட்டுப்படுத்துவதில் டாக்டர்களுக்கு நிகராக களத்தில் நின்று பணியாற்றுபவர்கள் தூய்மைப் பணியாளர்கள். கொரோனா தொற்றுக்கு ஆளாக கூடிய அபாயகரமான சூழ்நிலையிலும் தங்களைப் பற்றி கவலை கொள்ளாமல் தங்களது கடமையை செவ்வனே செய்துவருவது உலகம் பார்த்து வியக்கும் விஷயம்.

இவ்வாறு போற்றத்தக்க தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்த நினைத்த தாராசுரம் அறிஞர் அண்ணா அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர் சுதந்திர தினத்தன்று பள்ளியில் தேசியக்கொடியை தூய்மை பணியாளர்களை கொண்டு ஏற்ற வைத்தது சிலிர்ப்பான நிகழ்வாக அமைந்தது.

இதுகுறித்து தலைமையாசிரியர், “தூய்மைப் பணியாளர்களின் சேவை போற்றப்பட வேண்டிய ஒன்று. அவர்களால் தான் நாடும் வீடும் பள்ளியும் தூய்மையாக இருக்கிறது. இந்த கொரோனா காலத்தில் அவர்களது பணியை பாராட்ட வார்த்தைகள் இல்லை. எனவே தூய்மை பணியாளர்களை கௌரவப்படுத்த வேண்டும் என நினைத்தோம். அதன்படி கும்பகோணம் நகராட்சியில் தூய்மை பணியாளர்களாக பணியாற்றும் ராஜசேகர், ரமா இருவரையும் சிறப்பு விருந்தினர்களாக அழைத்து வந்து, சால்வை அணிவித்து, மரியாதை செய்து தேசியக்கொடியை ஏற்றி வைத்தோம். இதை அவர்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை. நெகிழ்ந்து விட்டார்கள்” என்று தெரிவித்தார். விளிம்புநிலை மனிதர்கள் பாராட்டப்படும் போதும் அவர்களுக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைக்கும் போதும் மகிழ்ச்சி ஏற்படுகிறது.

 


Share this:

Related posts

மாவட்டந்தோறும் அதிரடி… நாகை மக்களுக்காக முதல்வர் வெளியிட்ட அசத்தல் அறிவிப்புகள்…!!

MANIMARAN M

காரைக்காலில் நிபந்தனை ஜாமினில் வெளி வந்த பெண் தாதா தலைமறைவு…

MANIMARAN M

கோவையில் பெண்ணிடம் செயின் பறிப்பு : திருடர்களை மடக்கிப் பிடித்த பொது மக்கள்..!!!

MANIMARAN M

பட்டாசு ஆலையில் தீ விபத்து: உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் நிதி உதவி…!!

MANIMARAN M

இன்றே கடைசி நாள்: பொறியியல் படிப்பிற்கு விண்ணப்பித்தவர்கள் இதை செய்துவிட்டீர்களா?

THAVAMANI NATARAJAN

அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் நடக்கப்போவது இதுதான்… வெளியானது எச்சரிக்கை…!!

THAVAMANI NATARAJAN