Newskadai.com
இந்தியா

நவம்பர் 1 முதல் கல்லூரிகள் தொடங்கும்… கல்வி அமைச்சர் அதிரடி அறிவிப்பு..!!

7.5% internal reservation
Share this:

கொரோனா தொற்று காரணமாக நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகளுக்கு மார்ச் மாதம் முதல் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கொரோனா இன்னும் குறையாததால் ஊரடங்கு உத்தரவு முழுமையாக விலக்கி கொள்ளப்படவில்லை. இருப்பினும் அத்தியாவசிய சேவைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 5 மாதங்களாக கல்லூரிகளை திறக்கப்படாததால் நாடு முழுவதிலும் ஆன்லைன் கல்வி முறையே பின்பற்றப்படுகிறது.

2020-21 கல்வியாண்டின் இளங்கலை மற்றும் முதுகலை பட்டப்படிப்பின் முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1 ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும் என்று மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவித்துள்ளார்.

College

மேலும் மத்திய அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி மாணவர் சேர்க்கையை வரும் அக்டோபர் 31ம் தேதிக்குள் முடித்துவிட வேண்டும். இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான முதலாமாண்டு மாணவர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் வகுப்புகள் ஆரம்பிக்கவேண்டும் என அறிவித்துள்ளார்.

இந்த மாணவர்களுக்கு அடுத்தாண்டு மார்ச் 8ம் தேதி முதல் 26ம் தேதி வரை முதல் செமஸ்டர் தேர்வுகள் நடத்தப்படும் என்றும், அடுத்த பருவத்தேர்வுக்கான வகுப்புகள் அடுத்தாண்டு ஏப்ரல் 5ம் தேதி ஆரம்பிக்க வேண்டும். இரட்டை படை பருவத் தேர்வுகள் அடுத்தாண்டு ஆகஸ்ட் 22 முதல் 30ம் தேதி வரை நடத்தப்படும். மேலும் கொரோனா பாதிப்பு காரணமாக மாணவர்களின் பெற்றோர் கல்லூரி சேர்க்கைக்கு கட்டிய பணத்தை திறம்ப பெற விரும்பினால் நவம்பர் 30ம் தேதிக்குள் முழுத்தொகையும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று ரமேஷ் பொக்ரியால் தெரிவித்துள்ளார்.


Share this:

Related posts

ஐந்தாம் கட்டத்தில் “வந்தே பாரத் மிஷன்”… 9 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு…!!

MANIMARAN M

அயோத்தி வழக்கில் அதிரடி தீர்ப்பு: நீதிபதி ரஞ்சன் கோகோய்யை முதல்வராக்கி அழகு பார்க்க போகும் பாஜக…!!

MANIMARAN M

ரூ.1 அபராதம் : நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி…!!

MANIMARAN M

தனி கட்சி முதல் ஜனாதிபதி வரை… பிரணாப் முகர்ஜியின் அரசியல் பயணம்…!!

MANIMARAN M

கொரோனாவுடன் மருத்துவமனையில் இருந்து தப்பிய நபர்… புதரில் சடலமாக மீட்பு….!!

NEWSKADAI

ஒன்றரை ஆண்டுகளாக பெண்ணை கழிப்பறையில் அடைத்து வைத்து கொடுமை… மீட்க சென்ற அதிகாரிகளுக்கு கதவுக்கு பின்னால் காத்திருந்த அதிர்ச்சி…!

THAVAMANI NATARAJAN