Newskadai.com
இந்தியா

சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது : உச்ச நீதிமன்றத்தில் பதிலளித்த யுபிஎஸ்சி…

Share this:

வரும் அக்டோபர் 4 ஆம் தேதி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு நடைபெறவுள்ளது. இந்நிலையில் 20 தேர்வர்கள் இணைந்து இந்த தேர்வை ஒத்திவைக்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவில், கொரோனா தொற்று பரவல் காரணமாகவும், வடகிழக்கு மாநிலங்களில் கடுமையாக ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்பு காரணமாகவும் இந்த தேர்வினை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வேண்டும் எனக் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனுவை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏ. எம். கன்வில்கர் மற்றும் சஞ்சீவ் கண்ணா அடங்கிய அமர்வு விசாரித்து வருகிறது. முந்தைய விசாரணையில், தேர்வை ஒத்திவைப்பது குறித்து மத்திய அரசும், தேர்வை நடத்தும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையமும் பதிலளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர். இன்று மீண்டும் நடைபெற்ற விசாரணையில் சிவில் சர்வீஸ் தேர்வை ஒத்திவைக்க முடியாது என பதிலளித்துள்ளது மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம்.

இதைக் கேட்ட நீதிபதிகள், ஏன் தேர்வை ஒத்திவைக்க முடியாது என்ற காரணங்களை பிரமாணப்பத்திரம் மூலம் தாக்கல் செய்யும்படி மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்திற்கு உத்தரவிட்டு செப்டம்பர் 30 ஆம் தேதிக்கு இந்த வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.


Share this:

Related posts

பிரபலங்களுக்கு போதைப் பொருள் சப்ளை… திருநங்கை நடன கலைஞர் திடீர் கைது…!

THAVAMANI NATARAJAN

ஐந்தாம் கட்டத்தில் “வந்தே பாரத் மிஷன்”… 9 லட்சத்திற்கும் அதிகமான இந்தியர்கள் மீட்பு…!!

MANIMARAN M

“விவசாயிகளுக்கான கறுப்பு சட்டம்”… வேளாண் மசோதா குறித்து மோடியை விளாசிய ராகுல் காந்தி…!!

MANIMARAN M

கேஸ் முன்பதிவு செய்யும் முறையில் புதிய மாற்றங்களும் சலுகைகளும்…!

THAVAMANI NATARAJAN

உலகின் மிக நீளமான “குகைவழிப் பாதை” : இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி..!!

MANIMARAN M

ஒரே நாடு… ஒரே லைசன்ஸ்… ஒரே ஆர்.சி.புக்… டிஜிட்டல் இந்தியா…

MANIMARAN M