Newskadai.com
சினிமா

எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது… பிரதமருக்கு முதல்வர் கடிதம்…!!!

SPB
Share this:

கொரோனா தொற்றிலிருந்து மீண்டு வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் கடந்த மாதம் 25ம் தேதி சென்னையில் இருக்கும் எம்.ஜி.எம். மருத்துவமனையில் மாரடைப்பால் மரணம் அடைந்தார். எஸ்.பி.பி-யின் உடல் நுங்கம்பாக்கத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் மற்றும் திரையுலகினர் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

மறுநாள் சனிக்கிழமை காலை எஸ்.பி.பி-யின் உடல் தாமரைப்பாக்கத்தில் உள்ள அவருடைய பண்ணை வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு இறுதி அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அங்கு இயக்குநர்கள் பாரதிராஜா, அமீர், இசையமைப்பாளர் தேவி ஸ்ரீபிரசாத், நடிகர் விஜய் உள்ளிட்ட பல திரையுலக பிரபலங்களும், பொது மக்களும் இறுதி அஞ்சலி செலுத்தினர். பின்னர் 72 குண்டுகள் முழங்க முழு அரசு மரியாதையுடன் எஸ்.பி.பி. உடல் அவரது பண்ணை வீட்டிலேயே அடக்கம் செய்யப்பட்டது.

சாதனை படைத்த எஸ்.பி.பிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்து வந்த நிலையில் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்.


Share this:

Related posts

பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியம் உடல் நிலை கவலைக்கிடம்… செயற்கை சுவாசத்துடன் தீவிர சிகிச்சை…!!

AMARA

வைரல் பாட்டியை வலை வீசி தேடும் வில்லன் நடிகர்… மாஸ்டர் பிளானுடன் வெயிட்டிங்…!

NEWSKADAI

விஷால் அன் கோ-வை அலறவிட்ட பாரதிராஜா… ஒட்டுமொத்த கோலிவுட்டிற்கும் கொடுத்த அதிர்ச்சி வைத்தியம்…!!

AMARA

மீண்டும் மீண்டும் கேட்டு ரசித்த குரல் மீண்டு வந்தது…. எஸ்.பி.பி. உடல் நிலை குறித்து வெளியான பரபரப்பு அறிக்கை…!!

THAVAMANI NATARAJAN

குழந்தை பிறந்தநாளுக்கு நீங்க போடுற டிரஸா இது?… மோசமான உடையை பார்த்து முகம் சுளிக்கும் எமி ரசிகர்கள்…!!

THAVAMANI NATARAJAN

மிஷ்கின் பிறந்தநாள் கொண்டாட்டம்… முன்னணி இயக்குநர்கள் கொடுத்த செம்ம சர்ப்ரைஸ்..!!

THAVAMANI NATARAJAN