Newskadai.com
அரசியல்

வேளாண் சட்ட திருத்தங்களுக்கு ஆதரவு ஏன்?… முதல்வர் எடப்பாடி பழனிசாமி விளக்கம்…!!

Share this:

மத்தியில் ஆளும் பாஜக அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் மசோதாக்களுக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகிறது. காங்கிரஸ், திமுக, ஆம்ஆத்மி, திரிணாமுல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் எம்.பி.க்கள் இம்மசோதாவை நிறைவேற்ற எதிர்ப்பு தெரிவித்தனர். மக்களவையில் தாக்கல் செய்த மசோதாக்களை ஆதரித்த அதிமுக மாநிலங்களவையில் எதிர்த்தது.

மாநிலங்களவையில் வேளாண் மசோதாவின் நகல்கள் கிழித்து எறியப்பட்டதுடன் சபை தலைவரின் மைக் உடைக்கப்பட்டு கடும் அமளிகளும் அரங்கேறியது. நாடாளுமன்றத்தில் பாஜகவிற்கு அறுதிப் பெரும்பான்மை இருப்பதால் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு இடையே இம்மசோதாக்கள் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்நிலையில் தென் மாவட்டங்களில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆய்வுகளை மேற்கொண்டு வரும் தமிழக முதலமைச்சர் பழனிசாமி இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை ஆதரித்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளிக்கையில், மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களால் விவசாயிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. தமிழக விவசாயிகளுக்கு எதிரான எந்தவொரு திட்டத்தையும் அதிமுக ஆதரிக்காது.

வேளாண் விளைபொருளுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை தொடரும் என்று உறுதிப்படுத்திக் கூறியுள்ளார். மேலும், வேளாண் மசோதா குறித்து விவரம் தெரியாமல் ஸ்டாலின் பேசுகிறார் என்றும், மாநிலங்களவையில் அதிமுக எம்.பி எஸ்.ஆர்.பாலசுப்பிரமணியம் வேளாண் மசோதாவை எதிர்த்து பேசியது பற்றி விளக்கம் கேட்கப்படும் என்றும் அந்த பேட்டியில் தெரிவித்தார்.


Share this:

Related posts

“மாஸ்” காட்டிய திமுக மகளிரணி..!!! கைது செய்யப்பட்ட கனிமொழி..!!!

MANIMARAN M

ஓ.பி.எஸ். முகமூடியுடன் குவியும் தொண்டர்கள்… இ.பி.எஸ்.க்கு ஆதரவாக முழக்கம்…. அதிமுக செயற்குழு கூட்டத்தில் பரபரப்பு…!

AMARA

வேதா நிலையம் #81 போயஸ் கார்டன்….

NEWSKADAI

மாபெரும் தலைவர் ’பெரியார்’ பிறந்த நாள்… புகழ்மாலை சூட்டும் தலைவர்கள்…!!

NEWSKADAI

தொலைபேசி ஒட்டுக்கேட்பு : விளக்கமளிக்க மத்திய உள்துறை உத்தரவு.

NEWSKADAI

#BREAKING அதிமுக வழிகாட்டு குழு அமைப்பு… 11 பேரின் பெயரை வெளியிட்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி….!!

NEWSKADAI