Newskadai.com
அரசியல்

“மாணவ செல்வங்களே இதுபோல் செய்யாதீர்கள்”…. உருக்கமாக கோரிக்கை வைத்த முதலமைச்சர்…!!

Share this:

மருத்துவ இளநிலை படிப்பில் சீட் கிடைக்க வேண்டும் என்றால் மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம். தனியாக கோச்சிங் சென்டர்களுக்கு சென்று ஆயிரங்களை கொட்டிக்கொடுத்து பயிற்சி பெற வேண்டிய நிலை உள்ளதால், நீட் தேர்வில் வெற்றி பெறுவதும், மருத்துவராவதும் ஏழை மாணவர்களுக்கு எட்டாக்கனியாக மாறியுள்ளது. குறிப்பாக அரசு பள்ளி மாணவர்கள் இந்த தேர்வில் வெற்றி பெறுவது கஷ்டம் என்பதால், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் என்ற கொள்கை வலுத்து வருகிறது.

vignesh

இந்நிலையில் அரியாலூர் மாவட்டம் செந்துறை அருகே எலந்தங்குழி கிராமத்தைச் சேர்ந்த விக்னேஷ் என்ற மாணவர் நீட் தேர்வுக்கு தயராகிக்கொண்டிருந்த நிலையில், கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். 3வது முறையாக நீட் தேர்வில் பங்கேற்க தயாராகி இருந்த விக்னேஷ் மன உளைச்சலால் தற்கொலை செய்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதற்கு முன்னதாக கோவையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற மாணவியும் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டார்.

மன உளைச்சலால் தற்கொலை செய்து கோண்ட மாணவன் விக்னேஷ் குடும்பத்திற்கு ரூ. 7 லட்சம் நிதி உதவி வழங்க உத்தரவிட்டு முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தமிழக அரசு மாணவர்களின் நலனில் எப்போதும் அக்கறையோடும், அவர்களின் வளர்ச்சிக்கு உறுதுணையாகவும் செயல்படும் என்பதை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்வதோடு, பெற்றோர்களும் தங்கள் குழந்தைகளின் விருப்பத்தினை அறிந்து நல்வழிப்படுத்திட வேண்டுமெனவும் அன்போடு நான் கேட்டுக்கொள்கிறேன்.

மாணவர்கள் இதுபோன்ற விபரீத முடிவுகளை எடுப்பது எனக்கு மிகுந்த மனவேதனை அளிக்கிறது. வாழ்வில் வெற்றி பெற எண்ணிலடங்கா வழிகள் இருக்கும் நிலையில், மாணவச் செல்வங்கள் எதையும் எதிர்கொள்ளும் மன உறுதியையும், விடா முயற்சியையும் வளர்த்துக் கொண்டால், வெற்றி பெறுவது நிச்சயம்” என உருக்கமாக கோரிக்கை வைத்துள்ளார்.


Share this:

Related posts

அதிமுகவே மீண்டும் ஆட்சி அமைக்க வாய்ப்பு..? கருத்துக்கணிப்பு கூறுவது என்ன..!

AMARA

ஸ்டாலின் இதயத்தை நொறுக்கிய திடீர் மரணம்… மனமுடைந்து தவிப்பதாக உருக்கமான அறிக்கை….!!

AMARA

“சுத்தமா திருப்தி இல்ல”… உங்கள நம்பி எப்படி கட்சி ஆரம்பிக்கிறது?… தீவிர யோசனையில் ரஜினி…!

NEWSKADAI

“ஆளுநராக இருந்தாலும் அண்ணன் மகளாக அழுது கொண்டிருக்கிறேன்”… தமிழிசை சவுந்தரராஜன் கண்ணீர் அறிக்கை…!

AMARA

“பாஜகவில் இணையவில்லை”… திமுக எம்.எல்.ஏ. கு.க.செல்வம் அதிரடி விளக்கம்…!

AMARA

“எங்க கோவணத்தையும் உருவிடாதீங்க”… நாமம் போட்டு விவசாயிகள் போராட்டம்..!!

MANIMARAN M