Newskadai.com
தமிழ்நாடு

நாளை குடும்ப அட்டைதாரர்களுக்கு முதல்வர் கொடுக்கும் இன்ப அதிர்ச்சி

Share this:

குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் இந்தியா முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அரிசி, பருப்பு, கோதுமை போன்ற பொருட்களை பெற்றுக்கொள்ளும் வகையில் ஒரே நாடு, ஒரே ரேஷன் திட்டத்தை ஜூன் மாதம் முதல் மத்திய அரசு அமுல்படுத்தி வருகின்றது. இதற்கான அரசானையை தமிழக அரசு ஏற்கனவே வெளியிட்டிருந்த நிலையில் தமிழகத்தில் இத்திட்டத்தை  நாளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

ration

இத்திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

  • குடும்ப அட்டைதாரர்கள் எந்த ரேஷன் கடையில் வேண்டுமானாலும் அரிசி, பருப்பு, சக்கரை மற்றும் கோதுமை உள்ளிட்ட பொருட்களை பெற்றுக்கொள்ளலாம்.

  • தமிழகத்தை சேர்ந்தவர்களை வேறு எந்த மாநிலத்திற்கு சென்றாலும் அங்கு ரேஷன் பொருட்களை வாங்க முடியும்.

  • இதில் வெளிமாவட்டங்களில் இருந்து குடிபெயர்ந்தவர்கள் மற்றும் கொரோனா பரவல் காரணமாக வெளியிடங்களில் தங்கியுள்ள தொழிலாளர்கள் என அனைவரும் அவரவர் தங்கியுள்ள இடத்திலேயே பொருள் வாங்கமுடியும்.

  • இதுவரை இருந்த முறையில் ரே‌ஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும்போது ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டை ஸ்கேன் செய்து பொருட்கள் வழங்கப்பட்டது.

  •  நாளை முதல் ரே‌ஷன் கார்டிலும் பெயர் இடம் பெற்றுள்ளவர்கள் மட்டுமே கைரேகை பதிவு செய்து ரே‌ஷன் கடையில் பொருட்கள் வாங்க முடியும்.

  • இந்த திட்டத்திற்காக ஒவ்வொரு ரே‌ஷன் கடைகளிலும் பயோமெட்ரிக் கைரேகை கருவி அனுப்பி  வைக்கப்பட்டுள்ளது.

இம்முறையால் மக்கள் பெரிதும் பயனடைவார்கள் என தெரிவிக்கப்படுகிறது.


Share this:

Related posts

காரைக்காலில் நிபந்தனை ஜாமினில் வெளி வந்த பெண் தாதா தலைமறைவு…

MANIMARAN M

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்காக ஒன்றிணைந்த போலீசார்… சம்பளத்தில் இருந்து ரூ.86 லட்சம் நிதியுதவி…!

THAVAMANI NATARAJAN

ஆசிரியரிடம் லட்சக்கணக்கில் ஆட்டையை போட்ட ஆன்லைன் வர்த்தகம்..!!

THAVAMANI NATARAJAN

மக்களே உஷார்: விரைவில் நிரம்ப போகிறது பவானி சாகர் அணை… கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..!!

THAVAMANI NATARAJAN

இளைஞரை காவு வாங்கிய வேகத்தடை… நெடுஞ்சாலைத்துறையின் அஜாக்கிரதையால் நிகழ்ந்த அவலம்…!

THAVAMANI NATARAJAN

ஐ.டி.ரெய்டு: உர விற்பனை நிலைய உரிமையாளர் வீட்டில் ரூ.4 கோடி பறிமுதல்?

AMARA