Newskadai.com
தமிழ்நாடு

நாளை மறுநாள் மேட்டூர் அணை திறப்பு… முதலமைச்சர் அதிரடி உத்தரவு…!!

Share this:

தொடர்ந்து பெய்து வரும் தென்மேற்கு பருவமழையால் கர்நாடக அணைகள் நிரம்பி வழிகிறது. இதனால் கபினி, கிருஷ்ணராஜசாகர் மற்றும் நுகு ஆகிய அணைகளுக்கு வரும் மழைநீர் முழுவதும் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக காவிரி ஆற்றில் தொடர்ந்து நீர் வருவதால் வெள்ளப்பெருக்க ஏற்பட்டு மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்த வண்ணம் உள்ளது. நேற்றைய நிலவரப்படி, மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 20,000 கன அடியாக வந்து கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில்:

பொதுமக்கள் மேட்டூர் அணையின் கிழக்கு மற்றும் மேற்கு கரை கால்வாய் பாசனப் பகுதியில் உள்ள நிலங்களுக்கு பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிடுமாறு  வேண்டுகோள் விடுத்தனர்.
CM
அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்கி  மேட்டூர் அணையில் இருந்து வரும் 17- 31 ம் தேதி வரை பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும். அதில் கிழக்கு கரை  கால்வாய் பாசனப் பகுதியில் 27,000 ஏக்கர் நிலங்களும், மேற்கு கரை கால்வாய் பாசனப் பகுதியில் 18,000 ஏக்கர் நிலங்களும், மொத்தமாக 45,000 ஏக்கர் நிலங்கள்  பாசன வசதியை அடையும் .
இதன் மூலம் சேலம் மாவட்டத்தில் 16,443 ஏக்கரும், ஈரோடு மாவட்டத்தில் 17,230 ஏக்கரும், நாமக்கல் மாவட்டத்தில் 11,327 ஏக்கர் நிலங்களும் பாசன வசதி பெரும்.  மேலும் நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலான்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற வேண்டுமென அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித் துள்ளார். இதனால் அந்த பகுதி விவசாய குடிமக்கள் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

Share this:

Related posts

பொறியியல் இறுதி செமஸ்டர் தேர்வு அட்டவணை வெளியீடு…

MANIMARAN M

தொடரும் நீட் தேர்வு மரணங்கள்: கைக்கு வராத ஹால்டிக்கெட்… மன உளைச்சலில் மாணவி தற்கொலை..!!

MANIMARAN M

ஸ்டெர்லைட் ஆலையை திறப்பதற்கான தடை தொடரும்… உயர் நீதிமன்றம் அதிரடி…!!

AMARA

சேலத்தை கதறவிடும் ‘கொரோனா’… 136 இடங்களில் இன்று மருத்துவ முகாம்…!!

THAVAMANI NATARAJAN

4 மணி நேரத்திற்கும் மேலாக திணற திணற விசாரணை… எஸ்.வி.சேகரை வச்சி செய்யும் காவல்துறை…!!

NEWSKADAI

கோவிலுக்குள் கொன்று புதைப்பட்ட இளைஞர் சடலம்… கள்ளக் காதலால் அர்ச்சகர் செய்த கொடூரம்…!!

MANIMARAN M