Newskadai.com
தமிழ்நாடு

மூதாட்டியிடம் பணம் பறிக்க முயற்சி… அரிவாள் முனையில் கொள்ளையை தடுத்து நிறுத்திய சிங்கப்பெண்…!

woman who stole money
Share this:

சென்னையில் 76 வயதான மூதாட்டியிடம் இருந்து பணத்தை பறிக்க முயன்ற பெண்ணை அரிவாள் முனையில் போலீசாரிடம் பிடித்து கொடுத்த வீரப்பெண்னின் செயலால் அப்பகுதி மக்கள் அவரை பாராட்டி வருகின்றனர். சென்னை நுங்கம்பாக்கம் மாகலிங்கபுரம் சரஸ்வதி தெருவில் வசித்து வருபவர் மீனாட்சி வயது 76.

woman who stole money மேலும் படிக்க : http://தயாரிப்பாளருக்கு ‘நோ’ சொன்ன நடிகைக்கு கத்திக்குத்து… விசாரணையில் வெளியான பகீர் உண்மைகள்…!

 

இவரது கணவர் 20 வருடங்களுக்கு முன்பே இறந்து விட்ட நிலையில் இவரது ஒரே மகன் அமெரிக்காவில் குடும்பத்துடன் பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் தனிமையில் இருக்கும் மூதாட்டி பணத்தேவைக்காக அருகில் உள்ள வங்கியில் 50 ஆயிரம் பணத்தை எடுத்து கொண்டு தனியாக நடந்து வந்துள்ளார். வங்கியிலிருந்தே நோட்டமிட்டு வந்த இளம் பெண் ஒருவர் மூதாட்டியின் கவனத்தை திசை திருப்புவது போல் பேச்சிகொடுத்துள்ளார். இருப்பினும் மூதாட்டி அப்பெண்ணிடம் பேச்சு கொடுக்காமல் வந்துள்ளார். திடிரென மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு 50 ஆயிரம் பணத்தை பறித்து கொண்டு தப்பிச் சென்றார்.

woman who stole money இந்த நிலையில் மூதாட்டி சப்தம் போட்டதால் எதிர் வீட்டில் இருப்பவர்கள் ஓடி வந்துள்ளனர். கொள்ளைக்கார பெண் பக்கத்து வீட்டு தடுப்புச் சுவரில் ஏறி குதித்த போது காலில் அடிப்பட்டதால் அவரால் தப்பியோட முடியவில்லை, அதனால் பக்கத்து வீட்டில் உள்ளே நுழைந்து கதவை பூட்டி கொண்டார்.  பக்கத்து வீட்டின் உரிமையாளரான ஒரு பெண் அரிவாளை எடுத்துக் கொண்டு வீட்டில் நுழைந்து அப்பெண்னை வெளியில் இழுத்து வந்துள்ளார். தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து அந்த பெண்ணை கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்த ரெஜினா பானு என்பதும், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் துப்புரவு பணியாளராக பணியாற்றி வருவதும் தெரியவந்துள்ளது.


Share this:

Related posts

21, 22-ஆம் தேதிகளில் மத்திய கூட்டுறவு வங்கி, வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் உதவியாளர் பணிக்கான தேர்வு…

MANIMARAN M

கடலின் அமைதியான போக்கு விபரீதம் என்னவாக இருக்கும் மக்கள் பீதி..!!!

THAVAMANI NATARAJAN

மத்திய அரசே கேட்கல உங்களுக்கு என்ன?… தமிழக அரசின் இ-பாஸ் நடைமுறையால் சூடான உயர் நீதிமன்றம்…!

AMARA

கூலித்தொழிலாளியின் 3 மாத குழந்தை கடத்தல்… தீவிர தேடுதல் வேட்டையில் போலீசார்….!

THAVAMANI NATARAJAN

மின்சார ரயிலில் பொது மக்களுக்கு அனுமதி… ரயில்வே நிர்வாகம் அறிவிப்பு…!!!

MANIMARAN M

மருத்துவம் படித்த திருநங்கைக்கு நேர்ந்த அவலம்… போலீசார் செய்த மகத்தான உதவி ..!!!

THAVAMANI NATARAJAN