Newskadai.com
தமிழ்நாடு

“நான் இன்னும் சாகலப்பா”… நொந்து போன விஜிபி தாஸ் வெளியிட்ட வீடியோ…!!

vgp
Share this:

சென்னைக்கு புதிதாக வரும் அனைவரும் பார்க்க விரும்பும் முக்கிய இடங்களில் ஒன்றாக திகழ்வது கடற்கரை என்று தான் சொல்ல வேண்டும். அப்படிபட்ட கடற்கரை ஓரங்களில் நிறைய ரெசார்ட்கள் அமைந்துள்ளது, அதில் சென்னை கிழக்கு கடற்கறை சாலையில் அமைந்துள்ள பிரபலமான பொழுதுபோக்கு மையமான வி.ஜி.பி யுனிவர்செல் கிங்கமில் அமைந்துள்ளது, இதில் அனைவரையும் கவரும் வகையில் வாசலில் சிலை மனிதராக நிற்கும் தாஸை பார்க்காதவர்களே இருக்க முடியாது என்றுதான் சொல்ல வேண்டும், இவர் கடந்த 30 ஆண்டுகளாக சிலை மனிதராக பணியாற்றி வருகிறார்.

இவரின் சிறப்பு என்னவென்றால் இவரை யாராலும் சிரிக்க வைக்க முடியாது என்பது தான். கொரோனா தொற்று பரவல் காரணமாக இவர் வேலை இல்லாமல் வறுமையில் வாடி வருவதாக செய்திகள் பரவி வந்த நிலையில், நேற்று மாலை இவர் கொரோனா தொற்று காரணமாக இறந்து விட்டதாக வாட்சப், மற்றும் சமூக ஊடகங்களில் மீம்ஸ் பரவிவந்தது, இதை அறிந்த தாஸ் நொந்து போனார், கடந்த 30 வருடங்களாக யாராலும் சிரிக்க வைக்க முடியாத இவரை ஒரே மீம்ஸால் அழ வைத்து விட்டனர், இதை தொடர்ந்து தாஸின் உறவினர்கள் இது பொய்யான தகவல்கள் அவர் நலமுடன் இருக்கிறார் என குற்றம் சாட்டினர், தாஸ் உயிருடன் இருப்பதை சென்னை ஈஞ்சம்பாக்கம் காவல் துறையினர் உறுதிப்படுத்தினர்.


Share this:

Related posts

நாகை மாவட்டத்திலேயே முதலிடம்… ஐ.ஏ.எஸ்.கனவுடன் காத்திருக்கும் மாற்றுத்திறனாளி பெண்ணின் மகள்…!!

NEWSKADAI

“மகனின் மருத்துவ செலவிற்கு பணமில்லை”… வறுமையிலும் நேர்மையை விட்டுக்கொடுக்காத ஆட்டோ ஓட்டுநர்…!

MANIMARAN M

”கலெக்டர் ஆபிஸே சுடுகாடாகிடும்”… சப் கலெக்டருக்கு கொலை மிரட்டல் விடும்… அதிகாரி…!!

THAVAMANI NATARAJAN

கடவுள் தலையிலேயே கைவச்ச ’ஆசாமி’..!! திடுக்கிட வைத்த ’திருட்டு’

THAVAMANI NATARAJAN

இளைஞர் மீது ஏறிய கார் : மூன்று கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட கொடூரம்

MANIMARAN M

பிரதமரிடம் மனு போட்ட முதல்வர்.. நாம எப்பவுமே நிறைய தான் கேட்போம்… ஆனா அவங்க கொடுக்கனும்ல…

MANIMARAN M